"நிச்சயம் அவரு கொஞ்சம் தடுமாற தான் போறாரு.. ஆனா, அவரு பண்ண வேண்டியது இது மட்டும் தான்.." 'ஹிட்மேனுக்கு' செம 'ஐடியா' கொடுத்த 'கோச்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் போட்டிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

வரும் ஜூன் மாதம் 18 ஆம் தேதியன்று, இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் மைதானத்தில், இந்தியா மாற்றம் நியூசிலாந்து ஆகிய அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் மோதவுள்ளது. இந்த போட்டியைத் தொடர்ந்து, இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி ஆடுகிறது.
இதற்கான இந்திய அணி, சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில், சில வீரர்கள் இடம்பெறாமல் போனது ஒரு பக்கம் கேள்விகளை எழுப்பியிருந்தாலும், எந்தெந்த வீரர்கள் இந்த தொடரில் சாதனை புரிவார்கள் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. கடந்த ஆண்டு இறுதியில், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, அதிக அனுபவம் இல்லாத வீரர்களைக் கொண்டே, பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி, டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி வரலாறு படைத்திருந்தது.
இந்நிலையில், ஹிட்மேன் ரோஹித் ஷர்மா (Rohit Sharma) குறித்து அவரது சிறுவயது பயிற்சியாளர் தினேஷ் லாட் (Dinesh Lad) சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். 'ரோஹித் இங்கிலாந்தில் இன்னும் அதிகமாக கவனம் செலுத்தி, சிறப்பாக ஆட வேண்டும். சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில், சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் மற்றவர்கள் ஆட சிரமப்பட்ட போது, ரோஹித் ஷர்மா சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டு ஆடினார்.
அதே போல, இங்கிலாந்தில் நடைபெறவுள்ள தொடரிலும், சூழ்நிலைக்கு ஏற்றவாறு, தன்னை மாற்றிக் கொண்டு ரோஹித் நிச்சயம் ஆடுவார். மற்ற நாடுகளை விட, இங்கிலாந்தில் இருக்கும் ஆடுகளம் தான், வேகப்பந்து அதிகம் ஸ்விங் ஆக கை கொடுக்கும்.
இதனால், ரோஹித் நிச்சயம் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதற்கு ஏற்ற வகையில் அவர் தன்னைத் தயார் செய்து கொள்ள வேண்டும். நிச்சயம், அதற்கு தகுந்த படி, அவர் தயாராவார் என நம்புகிறேன். இதற்காக, சில பிரத்யேக பயிற்சிகளை அவர் மேற்கொள்ள வேண்டும்' என தினேஷ் லாட் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
