“தலதான் தலைசிறந்த கேப்டன்”!.... புகழ்ந்து தள்ளும் பிரபல வீரர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Arunachalam | May 03, 2019 02:40 PM

ஐபிஎல் தொடரின் மிகவும் பிரபலமான வீரர் பிராவோ. இவர் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில், இவர் தோனி, ரெய்னா மற்றும் உலக கோப்பை பற்றிய சில சுவாரஸ்ய தகவலை கூறியுள்ளார்.

bravo says about world cup cricket, dhoni and raina

அதில், ஐபிஎல் தொடர் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்களுக்கு உதவியாக உள்ளது. இதில், சிறந்த தலைமையின் கீழ் பயிற்சி பெறுகிறோம். மேலும், வீரர்கள் தங்களது திறமைகளை வளர்த்துக்கொள்ள ஐபிஎல் பெரிதும் உதவுகிறது. இதுதான் ஐபிஎல் தொடரின் சிறப்பு என்று கூறியுள்ளார்.

இந்நிலையில்,  சிஎஸ்கே அணிக்காக விளையாடுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சிஎஸ்கே அணியின் ஜெர்சியை அணிவது சந்தோஷமான விஷயம். இதனையடுத்து, சிஎஸ்கே அணியில் சுரேஷ் ரெய்னா தான் சிறந்த பாடகர் என்று கூறியுள்ளார்.

மேலும், தோனியின் தலைமை குறித்து என்னால் நிறைய சொல்ல முடியும், அவரது தலைமை குறித்து அனைவருக்கும் தெரியும். ‘இந்த உலகிலேயே தோனி தான் சிறந்த கேப்டன்’ என்று பிராவோ தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், உலக கோப்பை தொடரில் மற்ற அணிகளை போல வெஸ்ட் இண்டீஸ் அணியும் கோப்பையை வெல்ல வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. ஏனென்றால் யுனிவெர்சல் பாஸ் கிறிஸ் கெயில் மற்றும் ஆண்ட்ரு ரஸல் நல்ல ஃபார்மில் உள்ளார்கள் என்று பிராவோ கூறியுள்ளார்.