ஃபானி புயல்: 'பாதுகாப்பு முகாமுக்கு வாங்க'.. கையெடுத்து கும்பிட்டு அழைக்கும் எஸ்.பி.!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | May 03, 2019 02:09 PM
ஃபானி புயலால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், பாதுகாப்பு முகாமுக்கு வருமாறு மீட்புப் படையினர் கையடுத்து கும்பிடும் காட்சி பதைபதைக்க வைத்துள்ளது.
ஃபானி புயல், ஆந்திரா, ஒடிசா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களை ஒட்டி கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒடிசா மாநிலத்தில் இன்று கரையைக் கடந்தது ஃபானி புயல். மத்திய அரசு மீட்புப்பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. மாநில அரசும் மீட்புப்பணிகளில் ஈடுபட்டு, 11 லட்சம் மக்களைப் பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்தியுள்ளது. இயற்கை இடர்பாடுகளில் இவ்வளவு மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்தப்பட்டது இதுவே முதன்முறை.
இன்று காலை 5.30 மணியளவில் பூரியில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலையில் ஃபானி புயல் இருந்தது. இதனால் ஒடிசாவில் பேய் மழையுடன் கடும் வேகத்தில் காற்று வீசியது. மணிக்கு 200 முதல் 230 வேகத்தில் ஃபானி புயல் கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.
ஒடிசா கடற்கரை பகுதிகளை ஒட்டிப் பயணிக்கும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. ஒடிசாவின் 13 மாவட்டங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்துக்குத் தங்களது உடைமைகளுடன், விலை உயர்ந்த பொருள்களுடன் அப்புறப்படுத்தப்பட்டு இருந்தனர். பிரமாபூர் பகுதியில் தாழ்வான இடத்தில் வசிக்கும் பொதுமக்கள், வீட்டைவிட்டு காலி செய்ய மறுத்தனர். இதனால் மக்களை, மீட்புப்படையினர் கையெடுத்துக் கும்பிட்டு அப்புறப்படுத்தினர். இந்த புகைப்படம் பார்ப்பவர்களை கதிகலங்க வைத்துள்ளது.