'பாடிக்கொண்டிருக்கும் போதே மேடையில் சரிந்த 'பிரபல பாடகர்'...'உயிரிழந்த பரிதாபம்'...உருகவைக்கும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Sep 05, 2019 10:49 AM

பிரபல கொங்கனி இசை அமைப்பாளர் மற்றும் பாடகர் ஜெர்ரி பஜ்ஜோடி. இவர் கர்நாடக மாநிலம் மங்களூரைச் சேர்ந்தவர். இவர் பல்வேறு இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இவருடைய இசை நிகழ்ச்சிகள் இசை பிரியர்களிடையே மிகவும் பிரபலம்.

Konkani singer Jerry Bajjodi dies during live performance

இதனிடையே விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை இரவு மங்களூரில் உள்ள பேஜாய் பகுதியில் இசை நிகழ்ச்சி நடத்திக்கொண்டிருந்தார். அப்போது பிரபல கன்னட பாடல் ஒன்றை பாடிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அப்படியே முன் பக்கமாக சாய்ந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த விழா ஏற்பட்டார்கள் அவரை உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள்.

அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்நிலையில் ஜெர்ரியின் மரணம் அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது. ஜெர்ரி மேடையில் பாடியபடி சரிந்து விழும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Tags : #JERRY BAJJODI #KONKANI SINGER #GANESHOTSAVA