வீடு கட்ட தோண்டிய குழியில் கிடைத்த ‘தங்கப்புதையல்’.. வேடிக்கை பார்த்தவர் ‘திடீரென’ செஞ்ச செயல்.. பீதியடைந்த மக்கள்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாவீடு கட்ட நடத்தப்பட்ட பூமி பூஜையின்போது தங்கப்புதையல் கிடைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஜனகாமா மாவட்டத்தில் உள்ள பெம்பர்த்தி கிராமத்தில், நரசிம்ஹா என்ற ரியல் எஸ்டேட் அதிபர் சில ஆண்டுகளுக்கு முன்பு 11 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார். இந்த நிலையில் அந்த இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி வீடு கட்டுவதற்காக, பொக்லைன் இயந்திரம் மூலம் குழி தோண்டி பூமி பூஜை செய்துள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக செப்பு குடம் ஒன்று கிடைத்துள்ளது. இதனை எடுத்துப் பார்த்தபோது அதில் ஏராளமான தங்க ஆபரணங்கள் இருந்துள்ளன. இதைப் பார்த்ததும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த கிராமவாசி ஒருவர், புதையலுக்கு சூடம், ஊதுபத்தி காட்டி, தேங்காய் உடைத்துள்ளார். பின்னர் அந்த செப்பு குடத்தை கையில் எடுத்தது, சாமி வந்ததுபோல் சிரித்து அருகில் இருந்தவர்களை பீதியடைய வைத்துள்ளார்.
இதனை அடுத்து ரியல் எஸ்டேட் அதிபர் நரசிம்ஹா, போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலின் பேரில் வந்த அதிகாரிகள் தங்கப்புதையலைக் கைப்பற்றி எடுத்துச் சென்றனர். செப்பு குடத்தில் இருந்த தங்க ஆபரணங்கள் சுமார் 6 கிலோவுக்கும் மேல் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் காகதீய ராஜாக்கள் ஆட்சி காலத்தின்போது பூமிக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். வீடு கட்ட நடந்த பூமி பூஜையின்போது தங்கப்புதையல் கிடைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
