'இவங்க ரெண்டு பேருக்கும் சண்டையா'?...'வெடிக்கும் புதிய பிரச்சனை'... முக்கிய முடிவெடுக்கும் பிசிசிஐ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Jeno | Jul 15, 2019 04:23 PM
உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில் எந்தெந்த இடங்களில் எல்லாம் இந்திய அணி சொதப்பியது என்பது குறித்து பிசிசிஐ விரிவாக விவாதிக்க உள்ளது.
கேப்டன் விராட் கோலி மற்றும் துணை கேப்டன் ரோஹித் ஷர்மா இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு எழுந்துள்ள நிலையில் கேப்டன் பதவியை பிரித்து கொள்ளும் யோசனை குறித்தும் பிசிசிஐ விவாதிக்க உள்ளது. இதுகுறித்து பேசிய பிசிசிஐ அதிகாரி ஒருவர் '' போட்டியில் வெற்றியோ,தோல்வியோ நிச்சயமாக அடுத்த போட்டிக்கு தயாராக வேண்டும். இது தான் ஒரு சிறந்த அணி எடுக்கும் முடிவாகவும்.
இந்திய அணியும் தற்போது அந்த நிலையில் தான் உள்ளது. இந்திய அணி சிறு போட்டிகளுக்கு ரோஹித் ஷர்மாவையும், டெஸ்ட் போட்டிகளுக்கு விராட் கோலியையும் கேப்டனாக நியமிக்க பரிசீலனை செய்யலாம். விராட் கோலிக்கும், ரோஹித் ஷர்மாவுக்கும் இடையில் பிரச்னை என வரும் தகவல்கள் நிச்சயமாக அணிக்கு நல்லதல்ல. அது வெறும் வதந்திகளே. ஆனால் இந்திய அணி இது போன்ற பிரச்சனைகளை ஒரு பொருட்டாக எண்ணவில்லை. தற்போது இந்திய அணி அடுத்த பணிகளுக்கு செல்லும் வேலையை தொடங்கியுள்ளது.
அதிரடியாக விளையாடும் ரோஹித் ஷர்மா 50 ஓவர் போட்டிகளை வழிநடத்த இது சரியான தருணமாக இருக்கும். இப்போது கேப்டனாக இருக்கும் கோலிக்கும் பெரும் ஆதரவு உள்ளது. அதே நேரத்தில் அடுத்த உலகக் கோப்பைக்கு அவரை தயார்படுத்த வேண்டிய கட்டாயமும் உள்ளது. அதே போன்று ஏற்கனவே இருக்கும் இடங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது'' என அவர் கூறினார்.
இந்நிலையில் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்த்ரி, தேர்வுக் குழு அதிகாரி எம்.எஸ்.கே பிரசாத் ஆகியோர் நிர்வாகக் குழுவை சந்திக்க இருக்கிறார்கள். இதனிடையே உலகக் கோப்பை போட்டிகளுக்காக ஐ.பி.எல் போட்டிகளில் சில வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. ஆனால், அதில் ரோஹித் ஷர்மா மற்றும் கோலிக்கு மாற்று கருத்துக்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.