'ஒன்பது வருசத்துக்கு முன்னாடியே'...'இத பிளான் பண்ண மோடி'... பரபரப்பை ஏற்படுத்திய தகவல்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Jul 15, 2019 03:46 PM

9 ஆண்டுகளுக்கு முன்பே, ஓட்டு போடுவதை கட்டாயமாக்க நரேந்திரமோடி திட்டமிட்ட தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

9 years before modi planned for compulsive vote

தேர்தல்களில் ஓட்டு போடுவதை கட்டாயமாக்க பா.ஜனதா உறுப்பினர் ஜனார்த்தன் சிங் சிக்ரிவால் நாடாளுமன்ற மக்களவையில் தனிநபர் மசோதா தாக்கல் செய்துள்ளார். இந்த மசோதா மீது நேற்று முன்தினம் விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய சக பா.ஜனதா உறுப்பினர்களான அஜய் டேனி மிஸ்ரா, நிஷிகாந்த் துபே, பிஜு ஜனதாதள உறுப்பினர் பார்த்ருஹரி மகதாப் ஆகியோர் மசோதாவுக்கு எதிராக பேசினார்கள். இதுதொடர்பான விவாதம் இனிவரும் நாட்களிலும் நடைபெற இருக்கிறது.

இதனிடையே 9 ஆண்டுகளுக்கு முன்பே பிரதமர் மோடி ஓட்டு போடுவதை கட்டாயமாக்கும் முயற்சியில் ஈடுபட்ட தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மோடி குஜராத் மாநில முதலமைச்சராக இருந்த போது கடந்த 2010-ம் ஆண்டு, நடைபெற இருந்த உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு போடுவதை கட்டாயமாக்க திட்டமிட்டார். ஆனால் அப்போது கவர்னராக இருந்த கமலா பேனிவால் அதனை கடுமையாக எதிர்த்தார். கருத்துரிமையையும், ஓட்டு போடாமல் இருக்கும் உரிமையையும் அளிக்கும் அரசியல் சட்டத்தின் 19(1)(ஏ)-வது பிரிவை மீறும் வகையில் இருப்பதாக கூறி அதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்தார். இதனால் அப்போது மோடியால் அந்த முடிவை எடுக்க முடியவில்லை.

மோடிக்கு பிறகு ஆனந்திபென் பட்டேல் முதலமைச்சராக பொறுப்பேற்றார். அவர் மோடியின் கனவு திட்டமான, ஓட்டு போடுவதை கட்டாயமாக்கும் மசோதாவை கையிலெடுத்து அதில் வெற்றியும் பெற்றார். மோடி அரசால் நியமிக்கப்பட்ட கவர்னர் ஓ.பி.கோலி, ஒப்புதல் அளித்ததால், அந்த மசோதா சட்டமாக உருப்பெற்றது. இருப்பினும் அந்த மசோதாவிற்கு குஜராத் ஐகோர்ட்டு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

Tags : #NARENDRAMODI #BJP #COMPULSIVE VOTE