"தப்பித்தவறி அவரு விக்கெட்டை எடுத்துட்டா.. மொத்த நாடும் உங்களுக்கு எதிரா நிற்கும்".. இந்திய வீரர் பற்றி கலகலப்பாக பேசிய நாதன் லியன்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை தான் தற்போது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் எதிர்பார்த்து வருகின்றனர்.

இரண்டாவது போட்டி 17.02.2023 அன்று டெல்லி மைதானத்தில் வைத்து ஆரம்பமாகிறது. முன்னதாக நாக்பூரில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் முன்னேறுவதற்கு இந்திய அணி இந்த தொடரைக் கைப்பற்ற வேண்டிய சூழலில் உள்ளது. அப்படி இருக்கையில் தொடரையும் வெற்றியுடன் இந்திய அணி தொடங்கி உள்ளதால் நிச்சயம் அடுத்தடுத்த போட்டிகளிலும் அவர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் இருந்து வருகின்றனர்.
அதே வேளையில், முதல் போட்டி தோல்விக்கு நிச்சயம் ஆஸ்திரேலியா அணி பதிலடி கொடுக்கும் வகையில் டெல்லி மைதானத்தை கணித்து ஆடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளுக்குமே இரண்டாவது டெஸ்ட் போட்டி முக்கியமான ஒன்று என்பதால் நிச்சயம் விறுவிறுப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் சுழற் பந்துவீச்சாளர் நாதன் லயன் இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேனான விராட் கோலி மற்றும் ஜாம்பவான் சச்சின் பற்றி பேசியிருக்கிறார். விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்துவது குறித்து பேசிய அவர்,"சந்தேகமே இல்லாமல் விராட் கோலி உலக கிரிக்கெட்டின் சிறந்த பேட்ஸ்மேன். அவருடன் விளையாடுவதை பெருமையாகவே கருதுகிறேன். ஆனால், ஒருவேளை அவரது விக்கெட்டை வீழ்த்தும் வாய்ப்பு கிடைத்தால் மொத்த தேசமும் எனக்கு எதிராக இருப்பது போல தோன்றும். அவரது விக்கெட்டை வீழ்த்திவிட்டால் கிரிக்கெட் உலகில் மிகவும் வெறுக்கப்படும் வீரராக நீங்கள் மாறிவிடுவீர்கள். பல ஆண்டுகளுக்கு முன்னர சச்சினுக்கு பந்துவீசும்போதும் இதனை உணர்ந்திருக்கிறேன்" எனத் தெரிவித்திருக்கிறார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 7 முறை விராட் கோலியின் விக்கெட்டை நாதன் வீழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
