"அந்த நேரத்துல விராட் அணி, ரோஹித் அணின்னு பிளவு இருந்துச்சா?".. பல வருசம் கழிச்சு தெரியவந்த ஷாக்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் நட்சத்திர வீரர்களாக விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா உள்ளனர். இருவரும் சேர்ந்து பேட்டிங் செய்ய களமிறங்கினாலே ரசிகர்கள் மத்தியில் உச்சகட்ட விறுவிறுப்பு உருவாகும்.
Images are subject to © copyright to their respective owners.
அப்படி இருக்கையில், கடந்த 2019 ஆம் ஆண்டு உலக கோப்பை தொடருக்கு பின்பு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக இணையத்தில் தகவல் பரவி வந்தது.
2019 ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக அரைஇறுதியில் தோல்வியடைந்து இந்திய அணி வெளியேறி இருந்தது. இதன் பின்னர் கோலி மற்றும் ரோஹித் ஆகிய இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக இணையத்தில் தகவல் பரவி வந்தது.
இதனைத் தொடர்ந்து, 2020 - 21 ஆம் ஆண்டு சமயத்தில் அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளின் கேப்டன் பதவியில் இருந்து கோலி விலகிய பின் ரோஹித் சர்மா இந்திய அணியை வழிநடத்தியும் வருகிறார். அந்த சமயத்தில் ரோஹித் மற்றும் கோலி இடையே அதிக விரிசல் இருந்ததாகவும் கருத்துக்கள் பரவி பெரிய அளவில் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
Images are subject to © copyright to their respective owners.
அப்படி ஒரு சூழலில் இந்தியாவின் முன்னாள் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஆர். ஸ்ரீதர் எழுதிய புத்தகத்தில் கோலி மற்றும் ரோஹித் குறித்து சில கருத்துக்களை குறிப்பிட்டுள்ளார். "2019 உலகக்கோப்பை தோல்விக்கு பின் டிரெஸ்ஸிங் ரூமில் என்ன நடந்தது என்றும் அரையிறுதியில் நியூசிலாந்துடன் தோற்ற போது என்ன நடந்தது என்றும் மோசமான செய்திகள் வந்தது. இந்திய அணிக்குள் விராட் அணி மற்றும் ரோஹித் அணி என இரண்டு பிரிவில் இருந்ததாக எங்களுக்கு தெரிவிக்கப்பட்டது. யாரோ ஒரு வீரர் சமூக வலைத்தளங்களில் மற்றொருவரை பின்தொடரவில்லை என்றும் கூறப்பட்டது. இந்த நிலைமை சரி செய்யப்படவில்லை எனில் அது பெரிய பிரச்சனையை உருவாக்கி விடும் என்று எங்களுக்கு தெரியும்.
Images are subject to © copyright to their respective owners.
இதனையடுத்து உலககோப்பை முடிந்து சில நாட்கள் கழித்து நாங்கள் US வந்தோம். அப்போது தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி செய்த முதல் காரியங்களில் ஒன்று கோலி மற்றும் ரோஹித்தை தனது அறைக்கு அழைத்து பேசியது. இந்திய கிரிக்கெட் ஆரோக்கியமாக இருக்க இருவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். இவை அனைத்தையும் மாற்றி இந்திய அணி முன்னேறுவதற்கு நீங்கள் ஒன்றுபட விரும்புகிறேன்" என ரவி சாஸ்திரி அவர்களிடம் கூறியதாக ஆர். ஸ்ரீதர் குறிப்பிட்டுள்ளார்.
Also Read | Vibe ஆன ரியல் மலர் டீச்சர்.. .. மாணவர்களுக்கே டஃப் கொடுத்த டான்ஸ்..!. வீடியோ