"இப்படியா பண்றது?".. இஷான் கிஷன் செயலால் அப்செட் ஆன கோலி?.. மேட்ச் நடுவே பரபரப்பு சம்பவம்.. வீடியோ

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith Kumar V | Jan 25, 2023 01:30 PM

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த மூன்று போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றிருந்த நிலையில் தொடரை கைப்பற்றி நியூசிலாந்து அணியை ஒயிட் வாஷும் செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல், இந்த வெற்றியின் காரணமாக தற்போது ஒரு நாள் போட்டி தரவரிசையில் இந்திய அணி முதலிடமும் பிடித்துள்ளது.

Virat kohli and Ishan kishan mix up in third odi against newzealand

                                                              Image Credit : Hotstar

Also Read | "இத சாப்பிட்டு தான் உசுரு பொழச்சாரா?".. 24 நாட்கள் நடுக்கடலில் தவித்த நபர்.. மிரள வைத்த பின்னணி!!

இந்த தொடரின் மூன்றாவது ஒரு நாள் போட்டி, நேற்று (24.01.2023) நடைபெற்றிருந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் அதிரடியாக ஆடி ரன் குவித்தனர். இதனால் இந்திய அணி முதல் விக்கெட்டுக்கு 212 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் 101 ரன்களும், சுப்மன் கில் 112 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

முதல் ஒரு நாள் போட்டியில் 200 ரன்கள் எடுத்து சாதனை புரிந்த சுப்மன் கில், இந்த போட்டியில் சதமடித்து அசத்தி உள்ளார். அதே போல, சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு நாள் போட்டியில் சதமடித்து பட்டையை கிளப்பி உள்ளார் ரோஹித் ஷர்மா. 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 385 ரன்களை இந்திய அணி எடுத்திருந்தது.

Virat kohli and Ishan kishan mix up in third odi against newzealand

Images are subject to © copyright to their respective owners. 

தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர் டெவான் கான்வே, 100 பந்திகளில் 12 ஃபோர்கள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 138 ரன்கள் அடித்து அவுட்டானார். கடைசி கட்டத்தில் நியூசிலாந்து அணி சில விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழக்க, 42 வது ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 295 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

Virat kohli and Ishan kishan mix up in third odi against newzealand

Images are subject to © copyright to their respective owners.

இதனால் இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன் மட்டுமில்லாமல், தொடரையும் கைப்பற்றி தற்போது ஒரு நாள் தரவரிசை பட்டியலில் முதலிடத்தையும் பிடித்துள்ளது. இந்த நிலையில், இந்த போட்டிக்கு மத்தியில் இஷான் கிஷன் மற்றும் விராட் கோலி ஆகியோர் கோபம் கொண்டது தொடர்பான சம்பவம் பெரிய அளவில் பரபரப்பை உண்டு பண்ணி உள்ளது.

Virat kohli and Ishan kishan mix up in third odi against newzealand

Images are subject to © copyright to their respective owners. 

இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த சமயத்தில் 35 ஆவது ஓவரில் ஒரு சம்பவம் நடந்தது. ஜேக்கப் வீசிய பந்தை எதிர் கொண்ட இஷான் கிஷன், அதனை கவர் பகுதியில் அடித்து விட்டு வேகமாக சிங்கள் ஓட முயன்றார்.

இதனை பார்த்ததும் மறுபக்கம் நின்ற விராட் கோலியும் வேகமாக ஸ்ட்ரைக்கர் பகுதிக்கு ஓடவும் செய்தார். ஆனால் ஃபீல்டர் கைக்கு பந்து சென்றதும் இஷான் கிஷன் அப்படியே நிற்க, ரன் எடுக்க ஓடி வந்த விராட் கோலி, கிரீஸில் முதல் ஆளாக நுழைந்தார். மறுபக்கம் இஷான் கிஷன் ரன் அவுட் செய்யப்பட்டார். சரியாக கவனிக்காமல் இஷான் கிஷன் செய்த சிறிய தவறு, இந்திய ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தது.

Virat kohli and Ishan kishan mix up in third odi against newzealand

Images are subject to © copyright to their respective owners.

மிகவும் குழப்பமான ரன் அவுட்டாக இது அமைய, வெளியேறிய இஷான் கிஷனிடம், விராட் கோலி சற்று கோபத்துடன் ரியாக்சன் கொடுத்ததாகவும் தெரிகிறது. அதுமட்டுமில்லாமல் மாறி மாறி சில வார்த்தைகளையும் அவர்கள் பகிர்ந்து கொள்ளவும் செய்தனர்.

Also Read | "25 கோடி ரூபா லாட்டரில ஜெயிச்ச ஆள ஞாபகம் இருக்கா?".. லேட்டஸ்ட்டா வெளியான தகவல்.. "பம்பர் பரிசு அடிச்சா கவனமா இருங்கப்பா"

Tags : #CRICKET #VIRAT KOHLI #ISHAN KISHAN #THIRD ODI #NEWZEALAND #INDIA VS NEW ZEALAND

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Virat kohli and Ishan kishan mix up in third odi against newzealand | Sports News.