கிரவுண்ட்ல பாண்டியாவை முறைத்த விராட் கோலி.. டக்குன்னு பாண்டியா செஞ்ச காரியம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஹர்திக் பாண்டியாவை விராட் கோலி கோபமாக முறைத்த சம்பவம் ரசிகர்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்தியாவுக்கு இலங்கை கிரிக்கெட் அணி தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், முதலாவதாக டி 20 தொடர் நடந்து முடிந்தது. 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.
இந்நிலையில், கவுஹாத்தி மைதானத்தில் முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 373 ரன்கள் குவித்தது. இந்திய அணி ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக ஆடி ரன் எடுத்ததால், சிறப்பான ஸ்கோரை எட்டவும் வழி செய்திருந்தது. அதிலும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, 87 பந்துகளில் 12 ஃபோர்கள் மற்றும் ஒரு சிக்சருடன் 113 ரன்கள் எடுத்து பட்டையை கிளப்பி இருந்தார். துவக்க ஆட்டகக்காரர்களான ரோஹித் 83 ரன்களும், கில் 70 ரன்களும் எடுத்தனர்.
இதனையடுத்து 374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இலங்கை களமிறங்கியது. இருப்பினும், 50 ஓவர் முடிவில் அந்த அணி 8 விக்கெட்டுகளை இழந்து 306 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம், இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்யும்போது பாண்டியாவை விராட் கோலி கோபமாக முறைத்திருந்தார். 43 வது ஓவரை ரஜிதா வீசுகையில் அதனை எதிர்கொண்ட கோலி லெக் திசையில் அடித்துவிட்டு இரண்டு ரன்கள் ஓட முயற்சித்தார். முதல் ரன்னை முடித்துவிட்டு இரண்டாவது ரன் ஓடுவதற்கு களத்தில் பாதி தூரம் கோலி ஓடிவந்துவிட்டார்.
ஆனால், ஹர்திக் இரண்டாவது ரன் வேண்டாம் என சைகை காட்ட கோலி கோபமடைந்து அவரை முறைத்தார். இதைக்கண்ட ஹர்திக் வேறுபக்கம் திரும்பிக்கொண்டார். இதுபற்றி ரசிகர்கள் பரபரப்பாக பேசி வருகின்றனர்.
Also Read | காதலனுடன் தனிமையில் இருந்த இளம் பெண் ... சற்றும் எதிர்பாராதபோது செய்த நடுங்கவைக்கும் சம்பவம்..!

மற்ற செய்திகள்
