அண்ணாத்த ஆடுறார்.. மேட்ச்-ல ஜெயிச்ச அப்புறம் கோலி போட்ட குத்தாட்டம்.. கூட யாருன்னு பாருங்க.. வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Madhavan P | Jan 13, 2023 01:23 PM

நேற்றைய போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்ற பிறகு விராட் கோலி மைதானத்தில் நடனமாடிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாக பரவி வருகிறது.

Virat Kohli and ishan Kishan dances in ground after winning

Also Read | இப்படியா சாப்பாடு போடுவீங்க.. காதலன் வீட்டில் அளித்த விருந்தால் 'பிரேக் அப்’ பண்ணிய காதலி.!

இந்தியாவுக்கு இலங்கை கிரிக்கெட் அணி தற்போது சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், முதலாவதாக டி 20 தொடர் நடந்து முடிந்தது. 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரை  2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இதனையடுத்து தற்போது இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கவுஹாத்தி மைதானத்தில் முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து நேற்று கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் இரண்டாவது போட்டி நடைபெற்றது. இதில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க ஆட்டக்காரர் ஃபெர்னாண்டோ சிறப்பாக ஆடி அரைசதம் எடுத்தார். மற்ற பிளேயர்கள் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியதால் அந்த அணி 39.4 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 215 ரன்கள் எடுத்தது.

Virat Kohli and ishan Kishan dances in ground after winning

இந்திய அணி சார்பில் சிராஜ், குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்களையும் உம்ரான் மாலிக் 2 விக்கெட்களையும் அக்சர் படேல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இதனையடுத்து, சேஸிங்கில் இறங்கிய இந்தியா 43.2 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை எட்டியது. இறுதி நேரத்தில் ராகுல் பொறுப்பாக ஆடி அணியை வெற்றிபெற செய்தார். இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா வென்றிருக்கிறது.

Virat Kohli and ishan Kishan dances in ground after winning

நேற்றைய போட்டியில் இந்தியா வென்ற பிறகு, மைதானத்தில் விராட் கோலி நடனமாடியது அங்கிருந்த ரசிகர்களை உற்சாகமடைய செய்திருக்கிறது. போட்டிக்கு பிறகு மைதானத்திற்குள் இந்திய அணி வீரர்களான விராட் கோலியும் இஷான் கிஷனும் சேர்ந்து நடனமாடுகின்றனர். அப்போது அதனை ஆர்வத்தோடு பார்க்கும் ரசிகர்கள் கரகோஷம் எழுப்பி ஆராவாரம் செய்கின்றனர். இந்நிலையில், இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Also Read | எப்புட்றா.. இலங்கை வீரர் அடிச்ச ரிஸ்க்கான சிக்ஸ்.. கோலியே மிரண்டு போய்ட்டாரு.. வீடியோ..!

Tags : #CRICKET #VIRAT KOHLI #ISHAN KISHAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Virat Kohli and ishan Kishan dances in ground after winning | Sports News.