"'மேட்ச்' பரபரப்பா போயிட்டுருக்கு... அதுக்கு நடுவுல இப்டியா பண்றது??..." 'இந்திய' வீரர்களை நோண்டிய 'மார்னஸ்'... ஸ்டம்ப் மைக்கில் பதிவான 'ஆடியோ'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில், இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 96 ரன்கள் எடுத்துள்ளது.

சுப்மன் கில் 50 ரன்களும், ரோஹித் ஷர்மா 26 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். புஜாரா மற்றும் ரஹானே ஆகியோர் தற்போது களத்தில் உள்ளனர். இந்நிலையில், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் ஷார்ட் லெக் பகுதியில் ஃபீல்டிங் நின்றிருந்தார்.
அப்போது, சுப்மன் கில்லிடம் மார்னஸ், 'உங்களது மிகவும் பிடித்த வீரர் யார்?' என்ற கேள்வியைக் கேட்டார். அதற்கு பதிலளித்த கில், 'நான் பிறகு பதிலளிக்கிறேன்' என தெரிவித்தார். அத்துடன் விடாமல் மீண்டும் வம்பிழுத்த மார்னஸ், 'சச்சினைப் பிடிக்குமா அல்லது கோலியைப் பிடிக்குமா?' என்ற கேள்வியை முன் வைத்தார்.
சுப்மன் கில்லுடன் நிறுத்திக் கொள்ளாத மார்னஸ், ரோஹித் ஷர்மாவையும் நோண்டினார். இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்காத ரோஹித் ஷர்மா, ஆஸ்திரேலியாவிற்கு வந்து 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். அவரிடம், 'நீங்கள் குவாரன்டைன் சமயத்தில் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?' என்று மார்னஸ் கேள்வி எழுப்பினார். இதற்கு ரோஹித் ஷர்மா பதிலளிக்காமல் நின்று கொண்டிருந்தார்.
Some moments to laugh 😂 @marnus3 #indvsaus #icc #wtc #marnuslabuschagne #funny #AUSvsIND #INDvAUS @marnus3cricket pic.twitter.com/k6v4dU5JGl
— SriLanka Cricket Bloods 🌴🇱🇰 (@BloodsCricket) January 8, 2021
முன்னதாக, இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ வேட் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் அவரை கேலி செய்து 'ஹி...ஹி...ஹி...' என கிண்டல் செய்திருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலான கேள்விகளை வேட் கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
