'இந்தியா, நியூசிலாந்து போட்டியில் சிக்கல்?... 'அதிர்ச்சியில் ரசிகர்கள்'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Sangeetha | Jun 12, 2019 02:55 PM
இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையிலான ஆட்டம், மழை காரணமாக பாதிக்கப்படும் சூழல் நிலவி வந்த நிலையில், தற்போது மழையின் தாக்கம் குறைந்துள்ளது.
உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அங்கு தொடர்ந்து மழை பெய்து வருவதால், அடுத்தடுத்த போட்டிகள் பாதிப்படைந்துள்ளன. கடந்த 7-ம் தேதி பாகிஸ்தான் - இலங்கை அணிகள் மோதும் ஆட்டம், பிரிஸ்டல் மைதானத்தில் நடைபெற இருந்தது. ஆனால், மழையால் ஒரு பந்துகூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே, சௌதாம்டனில் நடைபெற்ற ஆட்டமும் 7.3 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் கை விடப்பட்டது.
இதேபான்று செவ்வாய்கிழமையன்று நடைபெற இருந்த வங்கதேசம், இலங்கை இடையேயான போட்டிகள், மழையால் டாஸ் போடாமலேயே ரத்து செய்யப்பட்டன. முக்கியமான மூன்று போட்டிகள் ரத்து செய்யப்பட்டன. இதனிடையே இன்று நாட்டிங்காமில் நடைபெற உள்ள போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டமும் மழையால் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. கடந்த சில நாட்களாக அங்கு மழை பெய்து வருவதால், இந்திய - நியூசிலாந்து அணிகள் இப்போது வரை, தத்தமது பயிற்சியை தொடங்கவில்லை.
இதனால் இரு அணிகளும் பயிற்சி இல்லாமல் போட்டியில், களமிறங்க வேண்டி நிலை ஏற்பட்டு இருக்கிறது. 70 முதல் 80 சதவிகிதம் வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை அறிக்கை கூறுவதால், போட்டியை கைவிட வேண்டிய சூழலே உள்ளது. மேலும் வரும் 16-ம் தேதி இந்தியா- பாகிஸ்தான் மோதும் போட்டியின்போதும் மழை பெய்யலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், மழையின் தாக்கம் 4 நாட்களுக்குப் பிறகு 50 சதவிகிதம் குறைந்துள்ளதால், ஆட்டம் நடைபெறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.