'கப்பு வேணும்னு சொன்னிங்க'...'எந்த கப்புனு சொன்னிங்களா?'...'16ம் தேதி' தெரியும்... நெட்டிசன்கள் தெறி!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Jun 12, 2019 11:31 AM

இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது என்றாலே போட்டியில் அனல் பறக்கும்.ஆனால் தற்போது போட்டி தொடங்குவதற்கு முன்பே அனல் பறந்து கொண்டிருக்கிறது.அதற்கு முக்கிய காரணம்,பாகிஸ்தான் வெளியிட்ட விளம்பரம்.

Indian Fans Furious Over Pakistan Channel\'s Ad On Abhinandan

காஷ்மீரின் புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக,பிப்ரவரி 26-ம் தேதி இந்திய விமானப் படை பாகிஸ்தானின் எல்லைப் பகுதியான பாலகோட்டுக்குச் சென்று தீவிரவாத முகாமின் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் விமானம் இந்திய வான் எல்லைக்குள் நுழைந்தது.இதனையடுத்து பாகிஸ்தானைச் சேர்ந்த எஃப் 16 ரக விமானத்தை இந்தியாவின் மிக் 21 ரக போர் விமானத்தை கொண்டு விரட்டியடிக்கப்பட்டது.

அப்போது மிக் 21 ரக விமானத்தை இயக்கிய அபிநந்தன் பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்டார். இரண்டு நாட்களுக்குப் பின்னர் விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தான் அரசால் விடுவிக்கப்பட்டார்.இதனிடையே அபிநந்தன் பாகிஸ்தானில் இருக்கும் போது பாகிஸ்தான் ராணுவம் வீடியோ ஒன்றை வெளியிட்டது.அதில் அபிநந்தன் டீ குடித்துக் கொண்டே பேசுவார். தற்போது அதனை கிண்டலடிக்கும் விதமாக பாகிஸ்தான் ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள விளம்பர வீடியோ, இந்தியர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

வரும் ஜூன் 16-ம் தேதி இந்திய பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியை விளம்பரப்படுத்தும் விதமாக இந்த விளம்பர வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.இதற்கு ட்விட்டரில் இந்தியர்கள் பலரும் தங்களது எதிர்ப்பினை கடுமையாக பதிவு செய்து வருகிறார்கள்.இது மிகவும் இழிவான செயல் என்றும்,வீடியோவில் வரும் கப்பையாவது பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள் என கிண்டலாக பதிவிட்டு வருகிறார்கள்.

Tags : #PAKISTAN #ICCWORLDCUP2019 #ICCWORLDCUP #WORLDCUPINENGLAND #PULWAMAATTACK #ABHINANDAN #ABHINANDAN VARTHAMAN