"'ரோஹித்'துக்கு ஒரு நியாயம்... 'அந்த' பிளேயருக்கு ஒரு நியாயமா??..." மீண்டும் 'கொதித்து' எழுந்த 'ரசிகர்'கள்... பரபரப்பு 'பின்னணி'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மட்டுமே ரோஹித் ஷர்மாவிற்கு இடம் கிடைத்துள்ள நிலையில், தற்போது முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் தொடர் நடைபெற்று கொண்டிருந்த சமயத்தில் தான் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டிருந்தது. அப்போது காயம் காரணமாக மும்பை அணிக்காக சில போட்டிகளில் ரோஹித் ஷர்மா விளையாடாமல் இருந்த நிலையில், அவரது பெயர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இடம்பெறவில்லை.
ஆனால், இந்திய அணி அறிவிக்கப்பட்ட சில தினங்களிலேயே அவர் மும்பை அணிக்காக மீண்டும் களமிறங்கியது, பிசிசிஐ மீது கேள்விகளை அடுக்கித் தள்ளியது. அதே போல, ரோஹித் ஷர்மாவை ஓரம்கட்ட வேண்டி இந்திய அணி கேப்டன் விராட் கோலி வேண்டுமென்றே இப்படி செய்தார் என ரோஹித் ரசிகர்கள் போர்க்கொடி தூக்கினர்.
இதனையடுத்து, ரோஹித்திற்கு டெஸ்ட் அணியில் மட்டுமே இடம் கிடைத்தது. ஐபிஎல் முடிவடைந்த போது, அவர் 70 சதவீதம் மட்டுமே உடற்தகுதியுடன் இருந்ததால் அவர் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டார். அங்கு தேசிய கிரிக்கெட் அகாடமியின் கண்காணிப்பில் உடற்தகுதியை முன்னேற்றி வந்தார்.
ஆனால், இன்னும் முழுமையாக ரோஹித் உடற்தகுதி பெறவில்லை என கிரிக்கெட் அகாடமி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ரோஹித் டிசம்பர் மாதம் தான் ஆஸ்திரேலியா செல்ல முடியும். அதன் பின்னர் அவர் பேட்டிங் பயிற்சி செய்ய வேண்டும் என தகவல்கள் தெரிவிக்கின்றது. பின் அங்குள்ள குவாரன்டைன் விதிமுறைகள் காரணமாக அவரால் முதல் டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியாது.
ஒரு பக்கம் நிலைமை இப்படி இருக்கையில், மறுபக்கம் ரோஹித் ஷர்மாவை விட அதிகம் காயத்தால் பாதிக்கப்பட்டிருந்த விருத்திமான் சஹா, டெஸ்ட் போட்டியில் களமிறங்க தயாராக உள்ளார். அவருக்கு இரண்டு இடங்களில் தசை பிடிப்பு இருந்த போதும், அவர் ஆஸ்திரேலியா அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கேயே அவர் உடற்தகுதியை நிரூபித்து டெஸ்ட் போட்டிகளில் ஆட தயாராக உள்ளார். அவரை விட குறைவாக காயத்தால் அவதிப்பட்ட ரோஹித் ஷர்மாவை ஏன் நேரடியாக ஆஸ்திரேலியா அழைத்து செல்லவில்லை என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. காயம் ஏற்பட்ட இரண்டு வீரர்களை ஏன் இரண்டு விதமாக பிசிசிஐ பார்க்கிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஏற்கனவே ரோஹித் - பிசிசிஐ விவகாரம் தொடர்பாக வெளிப்படையாக எந்த தகவலும் தெரியாமல் இருந்து வரும் நிலையில், இந்த சம்பவம் மேலும் கேள்விகளையும், பரபரப்பையும் உண்டு பண்ணியுள்ளது.

மற்ற செய்திகள்
