என்னங்க சொல்றீங்க அவரா இது..! ஓவர் நைட்டில் மாறிய வாழ்க்கை.. இணையத்தை தெறிக்க விடும் 60 வயது தாத்தா..!

முகப்பு > செய்திகள் > லைப்ஸ்டைல்

By Selvakumar | Feb 15, 2022 04:22 PM

கேரளாவில் தினக்கூலி வேலை பார்க்கும் 60 வயது முதியவரின் போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Kerala old labourer turns model photoshoot goes viral

‘இதுதான்யா உண்மையான காதல்’.. காதலர் தினத்தில் காதல் கணவருக்காக மனைவி செய்த செயல்.. உருக்கமான சம்பவம்..!

கேரளா

கேரளா மாநிலம் கோழிக்கோடு அடுத்த கொடிவள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மம்மிக்கா (Mammikka). 60 வயதான இவர் அப்பகுதியில் தினக்கூலி வேலைகளை செய்து வருகிறார். அனைவரிடமும் சிரித்து சகஜமாக பழகும் இவர், எந்த வீட்டில் என்ன கூலி வேலையாக இருந்தாலும் முதல் ஆளாக சென்று செய்பவர்.

தினக்கூலி

வெள்ளை முடி, சால்ட் அண்ட் பெப்பர் முறுக்கு மீசை மற்றும் தாடி என தோற்றம் கொண்ட இவர் அப்பகுதி இளைஞர்கள் பலருக்கும் நட்பானவர். மம்மிக்கா.. மம்மிக்கா என்று ஊரில் இருக்கும் இளைஞர்கள் இவரை நட்பாக அழைத்து ஜாலியாக உரையாடுவது வழக்கம் கொண்டுள்ளனர். இந்த நிலையில் அப்பகுதி போட்டோகிராபர் இவரின் வாழ்க்கையை மாற்றி உள்ளார்.

போட்டோகிராபர்

இவரின் தோற்றத்தைப் பார்த்த போட்டோகிராபர் ஷரீக், அட இந்த தாத்தா செம கெத்தாக இருக்கிறாரே என்று அவரை கூப்பிட்டு மாடல் சூட் எடுக்க முடிவு செய்துள்ளார். முதலில் இதற்கு மம்மிக்கா மறுத்துள்ளார். ஆனால் தான் எடுத்த போட்டோக்களை காட்டி மம்மிக்காவை போட்டோ ஷூட்டிற்கு சம்மதிக்க வைத்துள்ளார். இதனை அடுத்து மம்மிக்காவிற்கு கோட் சூட், மேக் அப் போட்டு போட்டோ எடுத்துள்ளனர்.

Kerala old labourer turns model photoshoot goes viral

செம வைரல் போட்டோஷூட்

உள்ளூர் நிறுவனம் ஒன்றுக்காக இந்த போட்டோஷூட் எடுக்கப்பட்டுள்ளது. இதில் மம்மிக்கா கூலாக கோட் சூட் அணிந்து, கண்ணாடி போட்டு , செம கெத்தாக இருந்துள்ளார். அதோடு கண்ணாடி போட்டுகொண்டு இவர் கார் பக்கம் நிற்பதும், நடப்பதும், கையில் டேப் லேட் வைத்து அதை பார்ப்பதுமான போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.

ஓவர் நைட்டில் சூப்பர் மாடல்

ஒரே இரவில் கேரளாவின் சூப்பர் மாடலாக மம்மிக்கா உருவெடுத்து இருக்கிறார். மாடலிங் பிடித்து போன மம்மிக்கா தற்போது தனக்கென இன்ஸ்டாகிராமில் பக்கம் ஒன்றையும் தொடங்கி உள்ளார். கூலித்தொழில் மற்றும் மாடலிங் இரண்டையும் செய்ய போவதாக மம்மிக்கா உற்சாகமாக கூறியுள்ளார். தினக்கூலியாக இருந்த முதியவரின் வாழ்க்கை போட்டோஷூட் மூலம் மாறியது அப்பகுதியில் பேசுபொருளாகியுள்ளது.

மாசம் ரூ.1000 தரப்போறாங்களா.. முதல்வர் ஸ்டாலின் படத்துடன் வைரலாகும் விண்ணப்பம்.. அரசு தரப்பு விளக்கம்..!

Tags : #KERALA #OLD LABOURER #MODEL PHOTOSHOOT #கேரளா #போட்டோகிராபர்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Kerala old labourer turns model photoshoot goes viral | Lifestyle News.