"இப்போ கல்யாணம் பண்ணிக்குறியா இல்லியா??.." ஆறு வருட காதல்.. 'காதலி' முடிவால்.. கோபம் தலைக்கேறிய இளைஞரின் பதற வைக்கும் செயல்
முகப்பு > செய்திகள் > இந்தியாகர்நாடகா : ஆறு ஆண்டுகள் காதலித்து வந்த பெண், திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்ததால், இளைஞர் எடுத்த முடிவு, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![karnataka angry lover makes wrong decision after his girlfriend refuse karnataka angry lover makes wrong decision after his girlfriend refuse](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/photo-karnataka-angry-lover-makes-wrong-decision-after-his-girlfriend-refuse.jpg)
"ராத்திரியும் அங்க தான் இருக்காரு.." கண்டித்த மனைவி.. கண்டுக்காத கணவன்.. நடந்த விபரீதம்
கர்நாடக மாநிலம், தொட்டபல்லாபுர் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் கிரிஷ். இவர், அப்பகுதியிலுள்ள அரசு மருத்துவமனையில், அக்கவுண்டண்ட் ஆக பணிபுரிந்து வருகிறார்.
இதே மருத்துவமனையில், இளம் பெண் பிரபாவதி என்பவர், செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், ஒரே மருத்துவமனையில், பணிபுரிந்து வந்த கிரிஷ் மற்றும் பிரபாவதி ஆகியோர், கடந்த ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
திருமண வேலை
இதனைத் தொடர்ந்து, தாங்கள் இருவரும் பெற்றோர்களிடம் சம்மதம் கேட்டு, திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். கிரிஷ் - பிரபாவதி காதலுக்கு, இருவரது வீட்டார்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, திருமணத்திற்கான வேலைகளிலும் அவர்கள் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
திடீர் மறுப்பு
இந்நிலையில், திடீரென பிரபாவதியின் பெற்றோர்கள், தங்களின் மகளை, கிரிஷ் திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. முதலில் சம்மதித்த பிரபாவதியின் பெற்றோர்கள், பிறகு ஏன் திருமணத்திற்கு மறுத்தார்கள் என்பது பற்றிய விவரங்கள் தெரியவில்லை.
இந்நிலையில், பிரபாவதியும், கிரிஷ்ஷிடம் பேசுவதை நிறுத்த முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. தனது பெற்றோர்கள் சம்மதம் சொல்லாததால், கிரிஷ்ஷை திருமணம் செய்யாமல், பிரபாவதியும் மறுத்து வந்துள்ளார். ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்த பெண், திருமணம் செய்ய மறுத்ததால், கடும் கோபத்தில் இருந்துள்ளார் கிரிஷ்.
கேள்வி கேட்ட இளைஞர்
தொடர்ந்து, பிரபாவதியிடம் இது பற்றி பேசவும் கிரிஷ் முயற்சி செய்துள்ளார். பின்னர், பிரபாவதி வீட்டிற்கு சென்ற கிரிஷ், திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்தது ஏன் என பிரபாவதியிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது, இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் இல்லை என பிரபாவதி தெரிவித்துள்ள நிலையில், ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றுள்ளார் கிரிஷ்.
அதிர்ச்சி முடிவு
இதனால், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்த கிரிஷ், பிரபாவதியை தீர்த்துக் கட்ட முடிவு செய்துள்ளார். கத்தியை எடுத்து, சரமாரியாக பிரபாவதியை குத்தியுள்ளார். இதில், பல இடங்களில் வெட்டு காயங்களுடன், படுகாயமடைந்த பிரபாவதியை, மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், காதலியை குத்தியதன் பெயரில், கிரிஷும் போலீசில் சரணடைந்துள்ளார். தன்னை 6 ஆண்டுகள் காதலித்து விட்டு , திருமணம் செய்ய மறுத்ததால், அவரைத் தீர்த்துக் கட்ட முடிவு செய்ததாக கிரிஷ் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது பற்றி, வழக்குப் பதிவு செய்த போலீசார், தொடர்ந்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)