விமானத்தில் முதல் முறையாக ஏறிய தாய்.. சர்ப்ரைஸ் கொடுத்து அழகு பார்த்த மகன்.. வைரல் வீடியோ!!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith Kumar V | Mar 07, 2023 01:03 AM

இந்த உலகத்தில் தாய், தந்தையரை போல ஒருவர் மீது அன்பு காட்டும் ஆட்கள் யாருமில்லை. தங்களது பிள்ளைகள் வாழ்வில் சிறந்த நிலைக்கு வர வேண்டும் என்பதற்காக தங்களின் வாழ்வில் நிறைய தியாகங்களை செய்து அவர்களை முன்னுக்கு கொண்டு வர வேண்டும் என்று உழைக்கவும் செய்வார்கள்.

Youth took his mother in flight for first time video viral

                                            Images are subject to © copyright to their respective owners

பெற்றோர்களின் தியாகங்கள்

அதே போல, தங்களின் பெற்றோரின் தியாகங்களால் பல கடின உழைப்புகளுடன் வாழ்வில் முன்னேறும் பலரும், ஏணியாக இருந்து தங்களை உயர்த்தி விட்ட பெற்றோரை இன்னும் அழகு பார்க்க அவர்களுக்கு பிடித்தமான விஷயங்களை செய்வதோ அல்லது அவர்கள் வாழ்வில் அனுபவம் செய்யாத விஷயங்களை சர்ப்ரைஸாக செய்து ஆனந்தப்படுத்தவோ செய்வார்கள்.

அப்படிப்பட்ட ஒரு மகன் செய்த விஷயம் தான் தற்போது இணையத்தில் பலரையும் மனம் நெகிழ வைத்து வருகிறது.

அழகு பார்த்த மகன்

இந்த உலகில் நமது பெற்றோர்களுக்கு நல்ல விஷயங்களை செய்வதை விட யாருக்கு செய்து அழகு பார்க்க போகிறோம். அந்த வகையில் தான் இந்த இளைஞரும் தனது தாய்க்காக மிக அசத்தலான ஒரு விஷயத்தை செய்து காட்டி உள்ளார். இது தொடர்பாக வைரல் ஆகி வரும் வீடியோவின் படி, இதுவரை விமானத்தில் பயணம் மேற்கொள்ளாத தனது தாயை முதல் முறையாக விமானத்தில் அழைத்து சென்றுள்ளார் ஒரு இளைஞர்.

Youth took his mother in flight for first time video viral

விமானத்தில் கொடுத்த சர்ப்ரைஸ்

அந்த வீடியோவில், தனது மகனுடன் மிகவும் மகிழ்ச்சியாக விமான நிலையம் நுழைந்து, விமானத்திலும் ஏறுகிறார் அந்த தாய். அதே போல, ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்த படி, மகனுடன் சேர்ந்து மிகவும் ஜாலியாகவும் வெளியே பார்த்து ரசிக்கிறார் அந்த தாயார். அதே போல, விமானத்தில் இருந்தாலும் தனது மகனுக்கு நான் தான் உணவு ஊட்டி விடுவேன் என்ற வகையில், அவர் உணவூட்டி விடுவதும் பார்ப்பதற்கே மிகுந்த ஆனந்தமாக உள்ளது.

இதுவரை விமானத்தில் ஏறாத தனது தாயை விமானத்தில் ஏற்றி அழகு பார்த்த மகன் தொடர்பான வீடியோ, தற்போது பலரையும் எமோஷனல் ஆகவும் உணர வைத்துள்ளது.

Tags : #MOTHER #SON

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Youth took his mother in flight for first time video viral | India News.