5 பிள்ளைகளும் கைவிட்டதால் விரக்தி?.. ஒன்றரை கோடி ரூபாய் சொத்தை அரசுக்கு உயில் எழுதிய முதியவர்!!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith Kumar V | Mar 07, 2023 12:51 AM

உத்திரபிரதேசம் மாநிலம் முசாஃபர்நகர் மாவட்டம், பதானா என்னும் கிராமத்தை சேர்ந்தவர் நது சிங். இவருக்கு தற்போது 85 வயது ஆகிறது.

Old Man Wills property worth more than one crore to government

                                              Images are subject to © copyright to their respective owners

இவருக்கு நான்கு மகள்கள் மற்றும் ஒரு மகன் என மொத்தம் ஐந்து பிள்ளைகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. நது சிங்கின் மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு வயது முதிர்வு காரணமாக உயிரிழந்து விட்டார். மேலும் அவரது மகள்கள் அனைவருக்கும் திருமணம் நடந்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது.

முதியோர் இல்லத்தில் சேர்ந்த நது சிங்

நது சிங்கின் மகன் சஹரன்பூரில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இதனிடையே மனைவியின் மறைவிற்குப் பிறகு நது சிங் தனியாக வாழ்ந்து வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. மகன், மகள்கள் என மொத்தம் ஐந்து பிள்ளைகள் இருந்த போதிலும் தன்னை யாரும் கவனிக்காத காரணத்தினால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய கிராமத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் ஒன்றிலும் நது சிங் சேர்ந்ததாக சொல்லப்படுகிறது.

Old Man Wills property worth more than one crore to government

Images are subject to © copyright to their respective owners

அப்படி இருக்கையில் முதியோர் இல்லத்தில் சேர்ந்த தந்தையை 5 பிள்ளைகளும் சந்திக்கவும் போகவில்லை என கூறப்படுகிறது. இத்தனை பேர் இருந்தும் தன்னை யாரும் பார்க்க வரவில்லை என்பதாலும் அவர்கள் வயது முதிர்வால் கைவிட்டதாலும் கடும் விரக்தியிலும் நது சிங் இருந்துள்ளார்.

இந்த நிலையில் தான் மிகப் பரபரப்பான முடிவையும் நது சிங் எடுத்துள்ளது குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையுமே உத்தரபிரதேச அரசுக்கு அவர் உயில் எழுதி வைத்துள்ளார்.

அரசுக்கு ஒன்றரை கோடி உயில்

மேலும் தன்னுடைய உயிலில், தனது மறைவிற்குப் பின்னர் கிராமத்தில் உள்ள வீடும், ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள தன் நிலம் உள்ளிட்ட சொத்துக்களை மாநில அரசு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் நது சிங் குறிப்பிட்டுள்ளார். அதே போல தன்னுடைய நிலத்தில் மாநில அரசு பள்ளிக்கூடம் அல்லது மருத்துவமனை கட்ட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ள நது சிங், தனது இறப்புக்கு பின் தனது உடலை மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Old Man Wills property worth more than one crore to government

Images are subject to © copyright to their respective owners

இத்துடன் தனது மகன் மற்றும் நான்கு மகள்களும் தன்னுடைய இறுதி சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்க கூடாது என்றும் உயிலிலே அவர் எழுதி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. நது சிங் மாநில அரசுக்கு தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் எழுதி வைத்துள்ள சூழலில் இது தொடர்பாக பேசிய சார் பதிவாளர், நது சிங் சொத்துக்கள் அவரது மறைவுக்கு பின் மாநில அரசின் கீழ் கொண்டு வரப்படும் என்றும் கூறியுள்ளார்.

5 பிள்ளைகள் இருந்தும் தன்னுடைய 85 வது வயதில் முதியோர் ஒருவர் எடுத்துள்ள முடிவு தற்போது நாடெங்கிலும் பேசு பொருளாக மாறி உள்ளது.

Tags : #OLD MAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Old Man Wills property worth more than one crore to government | India News.