புதிய தண்ணீர் டேங்கிற்குள் கிடந்த பெண்ணின் உடல் பாகங்கள்... விஷயம் தெரிஞ்சு பீதியில் உறைந்த ஊர் மக்கள்!!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith Kumar V | Mar 07, 2023 12:22 AM

இந்தியாவின் டெல்லியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வாலிபர் அஃப்தாப், தன்னுடன் லிவிங் டுகெதரில் இருந்த காதலி ஷ்ரத்தா என்பவரை கொலை செய்து உடல் பாகங்களை வெட்டி பிரிட்ஜில் வைத்து பல்வேறு பகுதிகளில் வீசி இருந்த சம்பவம் நாடெங்கிலும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.

Woman boy found inside water tank reason and details here

                                         Images are subject to © copyright to their respective owners

இத்தனைக்கும் இந்த சம்பவம் நடந்து சுமார் 6 மாதங்கள் கழித்து தான் அனைவருக்கும் தெரியவும் வந்திருந்தது. அதுவரை காதலியின் உடல் பாகங்களை ஃபிரிட்ஜில் வைத்து ஒவ்வொரு பகுதியாக சென்று வீசியும் வந்துள்ளார் அஃப்தாப். இது தொடர்பாக அவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து அடுத்தடுத்து கட்டமாக விசாரணை மேற்கொண்டும் வருகின்றனர்.

தண்ணீர் டேங்கில் பெண்ணின் உடல்

இந்த நிலையில் ஏறக்குறைய அதே போன்று ஒரு சம்பவம் தான் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்று மீண்டும் அதிர்ச்சியை உண்டு பண்ணியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள உஸ்லாபூர் பகுதியில், கள்ளநோட்டு அச்சடிப்பது தொடர்பாக போலீசார் மற்றும் சில அதிகாரிகள், பவன் தாக்கூர் என்பவர் வீட்டில் நேரடியாக சென்று சோதனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில் அங்கே இருந்த தண்ணீர் டேங்க் ஒன்றில் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது அங்கிருந்த அனைவரையும் திடுக்கிட வைத்திருந்தது.

கள்ள நோட்டு பற்றி விசாரணை

அந்த பெண்ணின் உடல் பாகங்களை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த சூழலில், பவன் தாக்கூரின் மனைவி சதி சாஹு என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவரது கணவரான பவன் தாக்கூர் தான் இந்த கொலையை செய்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் இந்த கொலையை பவன் தாக்கூர் செய்துள்ள சூழ்நிலையில் அவரது மனைவியின் உடலை பாகங்களாக வெட்டி அந்த தண்ணீர் டேங்கில் போட்டு வைத்துள்ளார்.

கள்ள நோட்டுகளையும் அந்த வீட்டிலே அவர்கள் தயார் செய்து வந்ததாக கூறப்படும் நிலையில், அதனை சோதனை செய்ய போன இடத்தில் பெண் உயிரிழந்தது குறித்த தகவலும் தெரிய வந்தது அப்பகுதி மக்களை பீதி அடைய வைத்துள்ளது.

மனைவியை கொன்ற கணவன்

மனைவியை கொலை செய்த பவன் தாக்கூர் ஒரு தண்ணீர் டேங்க் மற்றும் கட்டர் மெஷின் வாங்கி, மனைவியின் உடலை பாகங்களாக வெட்டி உடலை எரித்து விடவும் முதலில் யோசித்துள்ளார். ஆனால் உடல் எரியும் நாற்றம் அப்பகுதியில் பரவி தான் சிக்கி விடுவோம் என்று பயத்தில் கவருக்குள் மனைவியின் உடல் பாகங்களை பொதிந்து அதனை தண்ணீர் டேங்க்கிற்குள் வைத்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் பவன் மற்றும் சதி சாஹு ஆகியோர் திருமணம் செய்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : #HUSBAND #WIFE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Woman boy found inside water tank reason and details here | India News.