வீடியோ கால் மீட்டிங்கில் 'பிஸி'யாக பேசிக் கொண்டிருந்த 'கணவர்'... சட்டென 'மனைவி' செய்த 'காரியம்'... "அவரே டென்ஷன் ஆயிட்டாரு 'பாவம்'!!"

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith | Feb 20, 2021 07:16 PM

கொரோனா தொற்று உலகம் முழுவதையும் அச்சுறுத்த ஆரம்பித்தது முதல், மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கிப் போனார்கள்.

woman tries to kiss her husband in video call gone viral

இதன் காரணமாக, பள்ளி மற்றும் கல்லூரி வகுப்புகள் தொடங்கி, தனியார் மற்றும் அரசு அலுவலகங்கள் தொடர்பான சந்திப்புகள் அனைத்தும் ஆன்லைன் வீடியோ கால் மூலமாக நடைபெற்றது. இப்படி ஆன்லைன் மூலம் நடைபெறும் சந்திப்புகளில் சில தவறுகளோ, நகைச்சுவைகளோ அறியாமல் நடக்கத் தவறியதுமில்லை. அப்படி ஏதேனும் நிகழ்வு நடைபெறும் போது அது உலகளவில் வைரலாகி, கவனிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தற்போதும் அது போன்ற ஒரு வீடியோ இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், நபர் ஒருவர் ஜூம் வீடியோ கால் மூலம் தனது தொழில் தொடர்பாக ஏதோ பேசிக் கொண்டிருந்த நிலையில், திடீரென அவர் அருகே வரும் அவரது மனைவி, அவரை முத்தமிட முயற்சி செய்கிறார். இதை சற்றும் எதிர்பாராத அந்த நபர், அதிர்ச்சியடைந்த நிலையில், கோபத்துடன் மனைவியிடம், 'முட்டாள்தனமாக நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?. கேமரா இணைப்பில் உள்ளது' என கடிந்து கொள்கிறார்.

இருந்த போதும் அந்த மனைவி, எதுவும் பேசாமல் சிரித்துக் கொண்டே நிற்கிறார். இது தொடர்பான வீடியோவை, பிரபல தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா, தனது ட்விட்டர் பக்கத்தில், 'வேடிக்கையான ஜூம் கால்' என குறிப்பிட்டுள்ளார்.

அதனை மற்றொரு தொழில் ஜாம்பவானான ஆனந்த் மஹிந்திராவும் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ, அதிக கவனம் பெற்று வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் பல விதமான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

 

 

அந்த பெண் வீடியோ கால் இணைப்பை ஆடியோ கால் இணைப்பு என தவறாக எண்ணியிருக்கலாம் என்றும், அவர்களின் தனிப்பட்ட காரியங்கள் தொடர்பான வீடியோக்களை இப்படி இணையத்தில் பகிர்வது தவறு என்பது போன்றும், மேலும் சிலர் இது அவர்கள் வேண்டுமென்றே எடுத்த வீடியோவாக கூட இருக்கலாம் என்றும் கூறி வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Woman tries to kiss her husband in video call gone viral | India News.