VIDEO : "நான் இங்க பேசிட்டு இருக்கேன் மா",,.. வீடியோ காலில் பெண் 'அரசியல்வாதி' செஞ்ச 'வேலை'... வேற லெவலில் வைரலாகும் 'வீடியோ'!!!
முகப்பு > செய்திகள் > உலகம்மெக்சிகோ (Mexico) நாட்டைச் சேர்ந்த வேலென்டினா பேட்ரீஸ் (Valentina Batres) என்ற பெண் அரசியல்வாதி ஒருவர், ஜூம் வீடியோ கால் மூலம் நடைபெற்ற மீட்டிங் ஒன்றில் கலந்து கொண்டார்.

அந்த வீடியோ காலில், கட்சி சார்பில் பல உறுப்பினர்கள் உடனிருந்த நிலையில் வேலென்டினா, தனது புகைப்படம் ஒன்றை தான் வீடியோ காலில் இருப்பது போல தயார் செய்து வைத்துக் கொண்டு அவர் அங்கிருந்து கிளம்பிச் செல்கிறார். சில வினாடிகள் கழித்து மீண்டும் அதனருகே வந்து அமர்கிறார்.
ஜூம் வீடியோ காலில் பெண் அரசியல்வாதி ஒருவர் இப்படி செய்த வீடியோ, உடனடியாக வெளியாகி அதிகம் வைரலான நிலையில், அது சர்ச்சையையும் கிளப்பியது. இந்த வீடியோவை அந்த வீடியோ கால் சந்திப்பின் போது, தலைமை தாங்கிய ஜோர்ஜ் கேவினோ (Jorge Gavino) தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 'எனது பேச்சிற்கு நீங்கள் அதிக கவனம் செலுத்துகிறீர்கள் என நினைத்தேன். பின்பு தான் தெரிந்தது அது உங்களின் புகைப்படம் தான்' என குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து வேலென்டினா இந்த சம்பவத்திற்கு விளக்கம் தெரிவித்துள்ளார். ' அந்த வீடியோவை முழுவதுமாக பாரத்தால் பல இடங்களில் நான் எனது உடலை அசைப்பதும், பதில் சொல்வதும் தெளிவாக தெரியும். தொழில்நுட்பத்தில் அந்த அளவுக்கு எனக்கு அறிவு இல்லாததால் தான் இந்த தவறு நிகழ்ந்தது' என அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக, பல நாடுகளில் ஊரடங்கு அமலிலுள்ள நிலையில், பள்ளி, கல்லூரி முதல் அலுவலக வேலைகள் அனைத்தும் வீடியோ கால்கள் மூலம் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், இது போன்ற சர்ச்சைக்குரிய பல காரியங்கள் வீடியோ காலின் போது நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Diputada @valentinabtg: y yo pensando que usted le estaba poniendo mucha atención a mi discurso, cuando me di cuenta que esa mirada atenta era una fotografía. 🤯 pic.twitter.com/AqjsMD9HBo
— Jorge Gaviño (@jorgegavino) September 19, 2020

மற்ற செய்திகள்
