ஒரே ஒரு பனிச்சறுக்கு 'வீடியோ' தான்... ஓவர் நைட்டில் வைரலான 'கூல்' ஜோடி... இணையத்தை தெறிக்க விட்ட அசத்தல் 'ஐடியா'!!!
முகப்பு > செய்திகள் > உலகம்என்.ஆர்.ஐ தம்பதியினர், வெளியிட்ட பனிசறுக்கு வீடியோ ஒன்றின் மூலம், ஒரே இரவில் இருவரும் வேற லெவலில் வைரலாகியுள்ளனர்.

பனிச்சறுக்கு வீடியோவில் அப்படி என்ன புதுமையை இவர்கள் செய்திருப்பார்கள் என நீங்கள் யோசிக்கலாம். ஆனால், மது மற்றும் திவ்யா எனப்படும் அந்த தம்பதியினர், வழக்கமான பனிச்சறுக்கு விதிகளை மாற்றி வைத்து விட்டு புதுமையான முறை ஒன்றை கையிலெடுத்துள்ளனர்.
அமெரிக்காவின் மினிசோட்டா என்னும் பகுதியில், பனிச்சறுக்கிற்கு பிரபலமான இடமாக விளங்கும் வெல்ச் கிராமத்தில் மது மற்றும் திவ்யா ஆகியோர், பாரம்பரிய உடையான வேஷ்டி, சட்டை மற்றும் புடவை அணிந்து பனிச்சறுக்கில் ஈடுபட்டனர். இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட திவ்யா, 'நம்மை திசை திருப்ப வேண்டி இது போன்ற செயல்களில் அவ்வப்போது ஈடுபட வேண்டும்' என அதில் குறிப்பிட்டுள்ளார்.
திவ்யா பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே இந்த வீடியோ அதிகம் வைரலான நிலையில், நெட்டிசன்கள் பலரும் இந்த தம்பதியரின் வித்தியாசமான முயற்சிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
