'பேசாமல் போன காதலி'...'காதலியின் 'மூக்கை கடித்து குதறிய'...காதலனின் வெறிச் செயல்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Apr 17, 2019 05:42 PM

காதலி தன்னுடன் பேசாமல் போனதால்,ஆத்திரத்தில் காதலியின் மூக்கை கடித்து குதறிய கொடூரம் நடந்துள்ளது.இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட இளைஞரை ராஜஸ்தான் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Jilted lover bites off woman’s nose in Ahmedabad

ராஜஸ்தான் மாநிலம் உதைப்பூர் மாவட்டம் கேர்வாடா பகுதியை சேர்ந்த இளம் பெண் மஞ்சு பர்மர்.இவரும் அதே பகுதியை சேர்ந்த கேசவ்லால் என்பவரும் இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் சந்த்கேடாவில் வசிக்கும் சகோதரி வீட்டுக்கு சென்ற மஞ்சு,அவர்கள் குடும்பத்தினருடன் தங்கி விட்டார்.குடும்பத்தில் நிலவிய வறுமையின் காரணமாக சகோதரி வீட்டில் தங்கியிருந்தே கூலி வேலைக்கு சென்று வந்தார்.

இதனிடையே மஞ்சு திடீரென அவரது காதலன் கேசவ்லால் உடன் பேசுவதை நிறுத்தி கொண்டார்.இதனால் காரணம் எதுவும் புரியாமல் கேசவ்லால் தவித்து வந்தார்.இந்நிலையில் தனது நண்பனின் மூலம் மஞ்சு  சந்த்கேடாவில் இருப்பதை அறிந்த கேசவ்லால்,அங்கு சென்றுள்ளார்.அப்போது மஞ்சுவை கண்ட கேசவ்லால் அவரிடம் பேசுவதற்காக சென்றுள்ளார்.ஆனால் அவர் பேச மறுக்கவே,ஆத்திரமடைந்த கேசவ்லால்,தனது காதலி என்றும் பாராமல் மஞ்சுவின் மூக்கை கடித்து குதறியுள்ளார்.

மஞ்சுவின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தார்கள்.இதனையடுத்து சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர் கேசவ்லால் மீது வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.

Tags : #AHMEDABAD #JILTED LOVER #RAJASTHAN #CHANDKHEDA #KESHAVLAL