ஜோ பைடன் அமைத்த மருத்துவ குழுவில் ‘தமிழ் பெண்’.. நினைக்கவே பெருமையா இருக்கு.. எந்த ஊர் தெரியுமா..?
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள ஜோ பைடனின் கொரோனா தடுப்பு குழுவில் தமிழக பெண் மருத்துவர் ஒருவர் இடம்பிடித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியைப் பூர்வீகமாகக் கொண்டவர் மருத்துவர் செலின். இவர் நியூயார்க் பல்கலைக்கழகத்தின் கிராஸ்மேன் மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும், அமெரிக்காவின் காசநோய் தடுப்புப் பிரிவில் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
தற்போது அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ள ஜோ பைடன், அமெரிக்காவில் கொரோனா தொற்று தடுப்புக்காக, தேசிய பெருந்தொற்றுத் தடுப்புக் குழு ஒன்றை நியமித்துள்ளார். 13 பேர் கொண்ட அந்தக் குழுவின் உறுப்பினர்களுள் ஒருவராக, தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மருத்துவர் செலின் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் மருத்துவர் செலினுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ‘அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்க உள்ள ஜோ பைடன், கோவிட் -19 தடுப்புக்கு அமைத்துள்ள தேசியப் பெருந்தொற்றுத் தடுப்பு குழுவில் செலின் நியமிக்கப்பட்டுள்ளதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். தமிழ்ப் பூர்வீகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் இத்தகைய முக்கியப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதைக் கண்டு பெருமைப்படுகிறேன். பணி சிறக்க வாழ்த்துகள்’ என அவர் பதிவிட்டுள்ளார்.
Glad to hear about the appointment of @celinegounder to the President-Elect Joe Biden’s National Pandemic Taskforce to combat COVID-19. Happy to hear about the appointment of a woman of Tamil origin to this crucial task force.
Congratulations & Best wishes. pic.twitter.com/qmMH7gjZQ9
— M.K.Stalin (@mkstalin) November 10, 2020
It is an honor and privilege to be called on to serve and support President-elect Biden and Vice President-elect Harris. We must care for one another. We must heal. We must unite against COVID. https://t.co/EHbOAPpswc
— Céline Gounder, MD, ScM, FIDSA (@celinegounder) November 9, 2020