பிரசவ வலியால் துடிச்ச பெண் பயணி.. ஒரே போன்கால்.. பரபரப்பான ரயில்வே ஸ்டேஷன்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Madhavan P | Feb 17, 2023 07:18 PM

உத்திர பிரதேச மாநிலத்தில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ரயிலில் பிரசவம் நடைபெற்றிருக்கிறது. இந்நிலையில் தாயும் சேயும் நலமுடன் இருப்பதாக ரயில்வே அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

Woman deliver baby in sleeper coach of Farakka Express

                           Images are subject to © copyright to their respective owners.

Also Read | 2 மாசம் கடுமையான வயிற்று வலி.. இளைஞரை ஸ்கேன் செஞ்சு பார்த்துட்டு அதிர்ந்துபோன மருத்துவர்கள்.. ஆத்தாடி இவ்வளவா..?!

உத்திர பிரதேச மாநிலத்தில் ஃபராக்கா எக்ஸ்பிரஸ் ரயிலில் எப்போதும் போல பயணித்துக்கொண்டிருந்தார் அந்த நிறைமாத கர்ப்பிணிப் பெண். விரைவில் பிரசவம் நடக்கலாம் என்ற நிலையில் பயணத்தின் நடுவே அவருக்கு வலி ஏற்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் சாதாரண வலியாக இருக்குமோ என அவர் சந்தேகமடைந்திருக்கிறார். ஆனால், நேரம் ஆக ஆக வலி அதிகரித்திருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்திருக்கிறார்.

அப்போது, போன் மூலமாக ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்க முயற்சி செய்துள்ளார் அந்த பெண். ஃபராக்கா எக்ஸ்பிரஸ் ரயிலின் S3 கோச்சில் 71 பெர்த்தில் தான் பயணித்து வருவதாகவும் தனக்கு பிரசவ வலி ஏற்பட்டிருப்பதாகவும் கூறி உதவி செய்யுமாறு கோரிக்கை வைத்திருக்கிறார் 38 வயதான அந்த கர்ப்பிணி பெண்மணி. இந்த தகவலை பெற்ற அதிகாரிகள் உடனடியாக இதுகுறித்து மேலிடத்திற்கு தெரிவித்திருக்கின்றனர்.

Images are subject to © copyright to their respective owners.

அதன்படி, வடகிழக்கு ரயில்வே மருத்துவமனையில் இருந்து சிறப்பு மருத்துவக் குழு வாரணாசி ரயில்வே நிலையத்திற்கு விரைந்தது. இதனிடையே, மருத்துவக் குழு வாரணாசி ரயில்வே ஜங்க்ஷனில் காத்திருப்பதாகவும், ரயில் அங்கு சென்றவுடனேயே முழு உதவியும் கிடைக்கும் எனவும் கர்ப்பிணி பெண்ணிடத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ரயில் வந்து சேர்ந்ததும், அந்த கோச்சில் இருந்த மற்ற பயணிகளை வேறு இடத்திற்கு மாற்ற உடனடியாக அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

அதன்பின்னர், மறைவாக இருக்க வேண்டும் என்பதற்காக அப்பகுதி முழுவதும் துணியால் சுற்றப்பட்டு இருக்கிறது. இதனிடையே மருத்துவ குழு அந்த பெண்ணிற்கு பிரசவத்தை துவங்கி இருக்கின்றனர். அதன் பலனாக குழந்தை நல்லபடியாக பிறந்திருக்கிறது. சிறிது நேரத்திற்கு பிறகு கண்விழித்து பார்த்த பெண்மணி அங்கிருந்த மருத்துவர்களுக்கு கண்ணீருடன் நன்றி தெரிவித்திருக்கிறார்.

Images are subject to © copyright to their respective owners.

அதன் பின்னர் அங்கிருந்த சக பயணிகள் மருத்துவர்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்திருக்கின்றனர். இதை தொடர்ந்து அதே ரயிலில் தாய் மற்றும் சேய் தங்களது பயணத்தை தொடர்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Also Read | ஃப்ரிட்ஜில் இளம்பெண் சடலம்.. சந்தேகம் வரக்கூடாதுன்னு லிவிங் டுகெதர் பார்ட்னர் செஞ்ச காரியம்.. பதற்றத்தில் டெல்லி..!

Tags : #UTTARPRADESH #TRAIN #PREGNANT WOMAN #DELIVERY #FARAKKA EXPRESS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Woman deliver baby in sleeper coach of Farakka Express | India News.