பிரசவ வலியால் துடிச்ச கர்ப்பிணி.. பனியால் ஸ்தம்பிச்ச போக்குவரத்து.. தோளில் சுமந்து சென்று இரண்டு உயிர்களையும் காப்பாத்திய ராணுவ வீரர்கள்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகாஷ்மீரில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி பெண்ணை தோளில் சுமந்து சென்று மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர் இந்திய ராணுவ வீரர்கள். இந்நிலையில் தாய் மற்றும் சேய் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதி மக்கள் அனைவரும் ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

Image Credit : ANI
காஷ்மீர் பள்ளத்தாக்கின் பனி படர்ந்த குப்வாரா மாவட்டத்தில் உள்ள காலரூஸ் எனும் கிராமத்தில் இருந்து நேற்று காலை 11 மணியளவில் இந்திய ராணுவ மையத்திற்கு ஒரு போன்கால் வந்திருக்கிறது. அப்போது இந்த மலை கிராமத்தில் ஒரு பெண்மணி பிரசவ வலியால் துடிப்பதாகவும் உதவி செய்யமாறும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த கிராமத்திற்கு ராணுவ வீரர்கள் விரைந்து சென்றிருக்கின்றனர்.
Image Credit : ANI
ஏற்கனவே அந்த பகுதி முழுவதும் கடுமையான பனிப் பொழிவு இருந்ததால் போக்குவரத்து ஸ்தம்பித்து போயிருக்கிறது. இருப்பினும் உடனடியாக கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து, அந்த கர்ப்பிணி பெண்ணை 5 கிலோ மீட்டருக்கு தோளில் சுமந்து செல்ல ராணுவ வீரர்கள் முடிவெடுத்திருக்கின்றனர். ஆபத்தான பனி சூழ்ந்த சாலையில் கர்ப்பிணி பெண்ணை சுமந்தபடி வீரர்கள் துணிச்சலாக பயணித்திருக்கின்றனர்.
Image Credit : ANI
இப்படி 5 கிலோமீட்டர் தூரம் பயணித்த நிலையில் சுமோ பாலத்தை இவர்கள் அடைந்த நிலையில் அங்கே ஆம்புலன்ஸ் ஒன்று காத்திருந்தது. அதன்மூலம் உடனடியாக கர்ப்பிணி பெண் உடனடியாக அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாகவும் தாய் மற்றும் சேய் இருவரும் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் நெகிழ்ச்சியடைந்த கிராம மக்கள் கண்ணீருடன் ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கின்றனர்.
Also Read | "அவரை சமாளிக்கிறது ரொம்ப கஷ்டம்".. இந்திய வீரர் பத்தி ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் உஸ்மான் கவாஜா சொன்ன விஷயம்..!

மற்ற செய்திகள்
