கால் ஸ்லிப் ஆகி.. ரயில் நடைமேடை இடையே சிக்கிய பெண்.. மீட்டு மருத்துவமனையில் சேர்த்தும் காத்திருந்த துயரம்!!
முகப்பு > செய்திகள் > இந்தியாரயிலுக்கு இடையே மாணவி ஒருவர் சிக்கி இருந்த நிலையில், தற்போது அவர் பற்றி வெளியாகி உள்ள தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம், காக்கிநாடா பகுதியை அடுத்துள்ளது அன்னவரை என்ற பகுதி. இந்த பகுதியை சேர்ந்தவர் சசிகலா. இவர் துவ்வாடா என்னும் பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் MCA படித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
மாணவி சசிகலா, குண்டூர் - ராயகடா விரைவு ரயிலில் தினமும் கல்லூரிக்கு சென்று வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றது.
அப்படி ஒரு சூழலில், வழக்கம் போல சமீபத்தில் கல்லூரி செல்வதற்காக ரயிலில் ஏறி உள்ளார் சசிகலா. இதனைத் தொடர்ந்து துவ்வாடா ரயில் நிலையத்திற்கு ரயில் வந்து நின்றுள்ளது. அந்த சமயத்தில் ரயிலில் இருந்து இறங்கிய சசிகலா, கால் இடறி ரயில் மற்றும் நடை மேடைக்கு இடையே மாட்டிக் கொண்டுள்ளார்.
இதனைக் கண்டதும் அங்கிருந்த பயணிகள் மற்றும் ரயில்வே ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில், மாணவி சசிகலாவை ரயில் தண்டவாளத்தில் இருந்து மீட்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர். மேலும் இந்த விபத்தின் காரணமாக அவரது காலும் தண்டவாளத்தில் சிக்கி பலத்த காயம் அடைந்து வெளியே வர முடியாமல் சிக்கித் தவித்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, ரெயில்வே துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட, அவர்கள் சம்பவ இடம் வந்து மாணவியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். மாணவியின் உடல் மாட்டிக் கொண்ட நிலையில், சுமார் ஒன்றரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு நடைமேடை சுவரை உடைத்து அந்த மாணவியை மீட்டனர். பின்னர் ஆம்புலன்ஸை வரவழைத்து மருத்துவமனைக்கும் மாணவியை அழைத்து கொண்டு சேர்த்திருந்தனர்.
இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி சசிகலா, பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலில் இருந்த காயங்கள் காரணமாக அவரது உடல்நிலை சற்று மோசமானதாக அவருக்கு உருவானதாக தகவல் தெரிவிக்கும் நிலையில், தற்போது அவர் உயிரிழந்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.

மற்ற செய்திகள்
