98 வயசுல விடுதலையான தாத்தா.. கூட்டிக்கிட்டு போக யாருமே வரலைன்னு.. ஜெயில் அதிகாரிகள் எடுத்த முடிவு.. நெகிழ்ச்சி வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்திர பிரதேச மாநிலத்தில் 98 வயதான முதியவர் ஒருவர் சிறையில் இருந்து விடுதலை பெற்றுள்ளார். அவருக்கு சிறைத்துறை அதிகாரிகள் பரிசுகளை வழங்கி வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்.

Also Read | தன்னை பாராட்டி கோலி போட்ட போஸ்ட்.. பாத்துட்டு சூரிய குமார் யாதவ் கொடுத்த ரியாக்ஷன்.. வைரலாகும் வீடியோ..!
98 வயதான ராம் சூரத், உத்தரப் பிரதேசத்தின் அயோத்தி சிறையில் 5 ஆண்டுகள் இருந்த பின்னர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார். ஐபிசி 452, 323 மற்றும் 352 ஆகிய பிரிவுகளின் கீழ் அந்த முதியவருக்கு தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. விடுவிக்கப்பட்டதும், அந்த நபர் சிறை ஊழியர்களிடமிருந்து பிரியாவிடை பெற்றார். இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை DG Prisons UP எனும் பக்கத்தில் காவல்துறை வெளியிட்டிருக்கிறது. அந்த வீடியோவில் கைகள் நடுங்கும் நிலையில் ராம் சூரத் அமர்ந்திருக்க, சிறை அதிகாரிகள் அவருக்கு மாலையிடுகின்றனர். கனமான ஆடைகள் மற்றும் பல உடமைகளை வைத்திருக்கும் ராம் சூரத்திற்கு அயோத்தியா சிறையின் கண்காணிப்பாளர் ஷஷிகாந்த் மிஸ்ரா புத்ராவத் மாலை அணிவிக்கிறார். அதன்பிறகு அவரை கைத்தாங்கலாக வெளியே அழைத்துவந்த அவர் ராம் சூரத்தை வழியனுப்பி வைத்திருக்கிறார்.
மேலும், ராம் சூரத்தை அழைத்துச் செல்ல அவரது குடும்பத்தினர் யாரும் வராததால் என்ன செய்வதென்று என புரியாமல் தவித்த அதிகாரிகள், காரில் அவரது வீட்டுக்கு அழைத்துச் செல்ல முடிவு எடுத்திருக்கின்றனர். அதன்படி, அயோத்தி மாவட்ட சிறை கண்காணிப்பாளர் திரு. ஷஷிகாந்த் மிஸ்ரா புத்ராவத்தின் காரில் ராம் சூரத் அவரது வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்.
அந்த வீடியோவில்,"98 வயதான ஸ்ரீ ராம்சுரத் ஜி விடுதலையானபோது அவரை அழைத்துச் செல்ல யாரும் வரவில்லை. அயோத்தி மாவட்ட சிறை கண்காணிப்பாளர் திரு. ஷஷிகாந்த் மிஸ்ரா புத்ராவத் தனது காரில் ராம் சூரத்தை வீட்டிற்கு அனுப்பி வைத்தார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது ட்விட்டர் தளத்தில் வைரலாக பரவி வருகிறது. "இந்த வீடியோ ஏற்படுத்திய தாக்கத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது" எனவும், "மனதை நெகிழ செய்துவிட்டது, இந்த வீடியோ" என்றும் நெட்டிசன்கள் இந்த பதிவில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
परहित सरिस धर्म नहीं भाई . 98 वर्षीय श्री रामसूरत जी की रिहाई पर लेने कोई नहीं आया . अधीक्षक जिला जेल अयोध्या श्री शशिकांत मिश्र पुत्रवत अपनी गाड़ी से घर भेजते हुए . @rashtrapatibhvn @narendramodi @myogiadityanath @dharmindia51 pic.twitter.com/qesldPhwBB
— DG PRISONS U.P (@DgPrisons) January 8, 2023
Also Read | சஹால் வழி தனி வழி.. சூரிய குமார் யாதவின் பேட்டிங்கை பாத்துட்டு சஹால் செஞ்ச விஷயம்.. ட்ரெண்டாகும் வீடியோ..!

மற்ற செய்திகள்
