வங்கிக்கு அடியில் இருந்த ரகசிய சுரங்கம்?.. விசாரிக்க வந்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!.. திடுக்கிடும் பின்னணி!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்தர பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள வங்கி ஒன்றில் நடைபெற்ற சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Also Read | "Bigg Boss டைட்டில் வின்னர்".. Elimination ஆன தனலட்சுமிக்கு அசீம் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தைகள்!
உத்தர பிரதேச மாநிலம், கான்பூரை அடுத்த பனுதி என்னும் பகுதியில் பாரத ஸ்டேட் பேங்க் வங்கி ஒன்று இயங்கி வருகிறது. இந்த வங்கியில் சமீபத்தில் ஊழியர்கள் வழக்கம் போல வந்துள்ள நிலையில், கடனுக்காக தங்கங்களை வைத்திருக்கும் லாக்கர் ரூமை திறந்து பார்த்த போது கடும் அதிர்ச்சி ஒன்று ஊழியர்களுக்கு காத்திருந்துள்ளது.
அங்கிருந்த தங்கங்கள் அனைத்தும் திருடப்பட்டு மாயமாக இருந்ததால் இதனை கண்டு பதறிப்போன அவர்கள் காவல் துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடம் வந்து விசாரித்த போது தான் கொள்ளையர்களின் அதிர்ச்சி திட்டம் குறித்து செய்தி தெரிய வந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றது. வங்கிக்கு அருகே ஆள் புழங்காத காலியிடம் ஒன்றில் வைத்து சுமார் 10 அடி நீளம், 4 அடி அகலத்திற்கு குழி தோண்டி சுரங்கம் அமைத்து சம்பவத்தன்று இரவு வங்கிக்குள் திருடர்கள் புகுந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.
அது மட்டுமில்லாமல் வங்கிக்குள் இந்த கொள்ளையர்கள் சிசிடிவி மற்றும் அலாரம் உள்ளிட்டவைகளை செயலிழக்க வைத்து சுமார் 1.8 கிலோ தங்கத்தை கொள்ளையடித்து தப்பியுள்ளதும் விசாரணையில் உறுதியாகி உள்ளது. இதன் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பணம் கொள்ளையடிக்கப்பட்ட வங்கியில் தடயவியல் நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் ஆதாரங்களையும் தேடி வருகின்றனர்.
இது ஒரு பக்கம் இருக்க, மேலும் நடந்த விசாரணையில் வங்கியை நன்கு நோட்டமிட்டு அனைத்து விவரங்களையும் தெரிந்து கொண்ட பின்னர் தான் இந்த கொள்ளை சம்பவத்தில் அவர்கள் ஈடுபட்டிருக்க முடியும் என்றும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொள்ளை போன தங்கங்கள் சுமார் 29 நபர்களுக்கு சொந்தமான நகைகள் என்றும் வங்கி மேலாளர் தெரிவித்துள்ளார். கொள்ளையாளர்கள் யார் என்பதை கண்டுபிடிக்கவும் போலீசார் மும்முரமாக இறங்கி உள்ளனர்.

மற்ற செய்திகள்
