ரயிலுக்குள் இருந்த மர்ம பெட்டி.. உள்ள இறந்த நிலையில் இளைஞர்?.. "அவரு கழுத்துல இருந்து தான்".. திகிலூட்டும் பின்னணி!!
முகப்பு > செய்திகள் > இந்தியாபாட்னாவுக்கு வந்த ரயில் ஒன்றில் இருந்த மர்ம பெட்டி ஒன்றை திறந்து பார்த்த போது அதற்குள் இருந்த விஷயம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

Images are subject to © copyright to their respective owners.
Also Read | முதல்வர் கடந்து சென்ற கொஞ்ச நேரத்தில் உடைந்து விழுந்த ராட்சத சிக்னல்.. கள ஆய்வின்போது பரபரப்பு..!
ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் பகுதியில் இருந்து பீகார் மாநிலம் பாட்னா பகுதி இடையிலான இன்டர்சிட்டி ரயில் ஒன்று டானாபூர் பிரிவில் உள்ள பாட்னா ரயில் நிலையத்தில் நின்றுள்ளது.
அந்த சமயத்தில் இந்த ரயிலுக்குள் பொது பெட்டியில் மூடிய நிலையில் மர்ம இரும்பு பெட்டி ஒன்று இருந்துள்ளதாக தெரிகிறது. இந்த சம்பவம் அங்கிருந்த பயணிகள் மத்தியில் கடும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து ரயிலுக்குள் மர்ம இரும்பு பெட்டி ஒன்று இருந்தது பற்றி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார், இரும்பு பெட்டியை கைப்பற்றி விசாரணையும் மேற்கொண்டனர். அப்படி இருக்கையில், அந்த பெட்டியை திறந்து பார்த்த போது கடும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்துள்ளது. அந்த இரும்பு பெட்டிக்குள் இளைஞர் ஒருவரின் உடல் இருந்தது, அனைவரையும் திடுக்கிட வைத்துள்ளது. போலீசார் மத்தியிலும் இந்த சம்பவம் அதிர்ச்சி அடைய வைத்த சூழலில் இளைஞரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காகவும் அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக ரயில்வே போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின் படி, ரயில் பிளாட்ஃபார்மை அடைந்த போது அதில் இருந்த மர்ம இரும்பு பெட்டி மீது போலீசாருக்கு சந்தேகம் உருவாகி உள்ளது. மேலும் அந்த பெட்டி மிகவும் கனமாக இருந்ததால் அதன் பூட்டை போலீசார் உடைத்து பார்த்துள்ளனர். அதில், 25 வயது மதிக்கத்தக்க இளைஞரின் உடல் மடக்கி வைக்கப்பட்டிருந்துள்ளது.
மேலும் அந்த உடலின் கழுத்தில் கயிறும் இருந்த சூழலில், கழுத்தை நெரித்து கொன்றிருக்க வாய்ப்புள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இறந்தவர் யார் என்பதை அடையாளம் காணவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ரயிலில் வந்த இரும்பு பெட்டி ஒன்றில், இளைஞரின் உடல் இருந்த சம்பவம் பலரையும் பீதியில் உறைய வைத்துள்ளது.

மற்ற செய்திகள்
