'உங்க வீட்டு பிள்ளையா நினைச்சு என்னை மன்னிச்சிடுங்க'... 'பூட்டிய வீட்டை திறந்த மனைவி'... ஒன்றும் புரியாமல் விழிபிதுங்கி நின்ற கணவன்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகர்நாடக மாநிலம் தார்வாட் (Dharwad) என்னும் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முத்துராஜ் (வயது 40). கூலித் தொழிலாளியான இவருக்கு திருமணமாகி மனைவியும், குழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில், முத்துராஜுக்கு கம்பாபுரா என்னும் பகுதியைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்துள்ளது. அது மட்டுமில்லாமல், இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இதுபற்றி, முத்துராஜ் மற்றும் லட்சுமி ஆகிய இருவரின் குடும்பத்தினருக்கும் தெரிய வந்துள்ளது.
இருவரின் குடும்பத்தினரும் முத்துராஜ் - லட்சுமி உறவைக் கண்டித்தனர். ஆனால், இது எதையும் காதில் போட்டுக் கொள்ளாத இருவரும் தொடர்ந்து பழகி வந்துள்ளனர். இதனையடுத்து, தார்வாட் பகுதியிலுள்ள கிராமம் ஒன்றில் அமைந்துள்ள வீட்டில் முத்துராஜ் மற்றும் லட்சுமி ஆகியோர் தனிமையில் இருந்துள்ளனர்.
அப்போது, இந்த தகவலையறிந்து முத்துராஜ் மற்றும் லட்சுமி ஆகியோரின் குடும்பத்தினர், அந்த பகுதிக்கு வந்து, வீட்டில் இருந்த இரண்டு பேரையும், கையும் களவுமாக பிடித்துள்ளனர். அதன் பின்னர், இதுபற்றி தார்வாட் டவுனிலுள்ள மகளிர் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தனர். புகாரின் பெயரில், போலீசார் விசாரணையை மேற்கொண்ட நிலையில், மனைவியுடன் சேர்ந்து வாழுமாறு முத்துராஜிற்கு அறிவுரை கூறினர்.
இதன் காரணமாக, மனம் திருந்திய முத்துராஜ், தனது மனைவியுடன் சேர்ந்து வாழ சம்மதித்தார். அது மட்டுமில்லாமல், தனது தவறை உணர்ந்த அவர், தனது மனைவி, குழந்தைகள் மற்றும் உறவினர்கள், போலீசார்கள் என அங்கிருந்த அனைவரின் காலிலும் விழுந்து மன்னிப்பு கேட்டார். 'நான் தவறு செய்து விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்' என கூறினார். முத்துராஜின் இந்த செயல் அங்கிருந்தவர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதன்பிறகு, தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் முத்துராஜ் கிளம்பிச் சென்றார்.
இதில், முத்துராஜ் அவரது மனைவியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதை அங்கிருந்தவர்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட நிலையில், அதிகம் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
