அடேய்...! 'காருக்குள்ள என் மனைவி இருக்காங்க...' 'காரை திருட வந்த நபர்கள்...' 'போயிட்டு வர கேப்ல...' - பதறிய கணவன்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாபஞ்சாபில் காருடன் மனைவியையும் திருடர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ராஜிவ் சந்த் என்பவர் தன் மனைவி ரித்துவுடன் கடந்த வியாழக்கிழமை மதியம் 1 மணியளவில் தனது குழந்தைகள் பயிலும் பள்ளிக்கு கல்விக் கட்டணம் செலுத்த தன்னுடைய காரில் சென்றிருக்கிறார்.
அப்போது தன் மனைவியை காரிலேயே இருக்க சொல்லி அவர் மட்டும் பள்ளிக்குள் சென்றுள்ளார். மனைவி காரில் இருப்பதால், கார் சாவியை காரிலேயே விட்டுச் சென்றிருக்கிறார். இதைக்கண்ட அங்கிருந்த இருவர் திடீரென காரில் ஏறியுள்ளனர்.
அப்போது ரித்து உள்ளே இருந்ததை கவனித்ததால் திருடர்களில் ஒருவர் டிரைவர் சீட்டில் அமர்ந்ததும், மற்றொருவர் பின்புறம் ஏறி, ரித்து சத்தம்போடுவதற்கு முன்பே அவர் முகத்தை மூடியிருக்கிறார். கிட்டத்தட்ட 5 கிமீ தூரம் சென்றதும் அம்பாலா டோல் பிளாசா அருகே ரித்துவை கீழே தள்ளிவிட்டு காரை மட்டும் ஓட்டிச் சென்றுவிட்டனர்.
இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட தம்பதியர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தாரையும், அப்பகுதி மக்களையும் பதட்டத்தில் ஆழ்த்தியது எனலாம்.

மற்ற செய்திகள்
