க்யூட்டா போஸ் கொடுத்துட்டு இருந்த புதுமண ஜோடி.. திடீர்ன்னு பின்னாடி நின்ன யானை செஞ்ச காரியம்.. "ஆத்தாடி, ஜஸ்ட் மிஸ்ஸு"!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஅவ்வப்போது இணையத்தில் நாம் நேரத்தை உலவிடும் போது, நம்மை சுற்றி வைரலாகி வரும் வீடியோக்கள் குறித்து நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.
![What elephant did to new couple video goes viral What elephant did to new couple video goes viral](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/what-elephant-did-to-new-couple-video-goes-viral.jpg)
இவற்றுள் அதிர்ச்சி கலந்த, வினோதமான, வேடிக்கை நிறைந்த வகையில் என நிறைய விஷயங்கள் குறித்து நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.
அதே போல, கல்யாணத்தை சுற்றி நடக்கும் விஷயங்கள் கூட அடிக்கடி நிறைய வைரல் ஆவதை நாம் பார்த்திருப்போம். மேலும் இன்றைய காலகட்டத்தில் திருமணத்தை சுற்றியுள்ள விஷயங்களான திருமண போட்டோஷூட், பத்திரிக்கை உள்ளிட்ட பல விஷயங்கள், பெரிய அளவில் புதுமை கலந்து இருக்கும் பட்சத்தில் அவை நெட்டிசன்கள் மத்தியில் கூட அதிக கவனம் பெறும்.
இன்னொரு பக்கம், திருமண ஜோடிகள் போட்டோ ஷூட் எடுக்கும் சமயத்தில் நடக்கும் வேடிக்கையான விஷயங்கள் கூட இணையத்தில் அவ்வப்போது வைரலாகி, பலரது லைக்குகளை அள்ளவும் செய்யும். இந்த நிலையில், தற்போது அப்படி ஒரு வீடியோ தான், பெரிய அளவில் இணையத்தில் வைரல் ஆகி வருவதுடன் பலரது மத்தியில் பரபரப்பையும் கிளப்பி உள்ளது.
கேரள மாநிலத்தில் இந்த சம்பவம் நடந்ததாக தகவல் தெரிவிக்கும் நிலையில், ஒரு புதுமண ஜோடி யானையின் முன்பு நின்று கொண்டு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்துக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அந்த சமயத்தில், பின்னால் தொழுவம் ஒன்றில் யானை நிற்க அதன் முன்பு நிற்கும் ஜோடி, பல விதமான போஸ்களையும் கொடுத்து கொண்டிருந்தனர்.
அந்த ஒரு சமயத்தில் தான், யாரும் எதிர்பாராத விதமான ஒரு சம்பவம் அங்கே அரங்கேறி உள்ளது. புதுமண ஜோடிகளின் பின்னால் நின்ற யானை, திடீரென தேங்காய் மட்டை ஒன்றை எடுத்து நேராக புது ஜோடியை நோக்கி வீசியதாக தெரிகிறது. நேராக வேகத்தில் வந்த அந்த மட்டை, மாப்பிள்ளையின் முதுகில் லேசாக உரசி, அவருக்கும் மணப்பெண்ணுக்கு இடையே உள்ள இடைவெளி மூலம் வேறு எந்தவித ஆபத்தையும் ஏற்படுத்தாமல் கடந்து சென்றது.
தேங்காய் மட்டை பறந்து வந்ததை அறிந்து கொண்டதும் மணமக்கள் கடும் அதிர்ச்சி அடையவும் செய்தனர். இது தொடர்பான வீடியோக்கள் தற்போது அதிகம் சோஷியல் மீடியாவில் வலம் வரும் நிலையில், பலரும் பலவிதமான கருத்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)