"என்ன கேமரால காட்டுவீங்களா இல்லையா?".. சீரியஸா பேசிட்டு இருந்த செய்தியாளர்.. குட்டி யானை க்யூட்டா செஞ்ச விஷயம்.. வைரல் வீடியோ!!
முகப்பு > செய்திகள் > உலகம்சோஷியல் மீடியாவில் நாம் அதிக நேரம் உலவிடும் போது நம்மை சுற்றி நடக்கும் ஏராளமான செய்திகள் மற்றும் நிகழ்வுகள் குறித்து நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.

Also Read | 70 வயது நபரின் மனைவிக்கு 19 வயசு.. "வாக்கிங் போன இடத்தில் பாட்டு பாடி இம்ப்ரஸ் பண்ண 50'ஸ் கிட்..
அது மட்டுமில்லாமல், இணையத்தில் அடிக்கடி பல வித்தியாசமாக அல்லது வினோதமாக இருக்கும் விஷயங்களும் அதிகம் வைரல் ஆவதையும் நாம் பார்த்திருப்போம்.
அதிலும் குறிப்பாக, ஏதாவது வன விலங்குகள் அல்லது உயிரினங்கள் குறித்த வீடியோக்கள் குறித்த செய்திகளுக்கு எப்போதுமே நெட்டிசன்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது.
பெரும்பாலும் வனத்தில் இருக்கும் விலங்குகள் இப்படி தான் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், அதனை உடைக்கும் விதமாக அவர்கள் செய்யும் சேட்டைகள் அல்லது குறும்புத்தனமான விஷயங்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஈர்க்க வைக்கும். அந்த வகையில் ஒரு வீடியோ தான், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி பலரது லைக்குகளை அள்ளி வருகிறது.
கென்யாவில் இந்த சம்பவம் நடந்ததாக தகவல் தெரிவிக்கும் நிலையில், இந்த வீடியோவில் செய்தியாளர் ஒருவர் கேமரா முன்பு நின்று செய்திகளை வழங்கி கொண்டிருக்கிறார். அவர் வன விலங்குகள் குறித்து பேசி கொண்டிருந்த சமயத்தில், சில யானைகள் மத்தியிலும் அந்த பத்திரிகையாளர் நின்றுள்ளார்.
அவரும் விஷயத்தினை சீரியசாக வழங்கி கொண்டிருக்க, பின்னால் நிற்கும் யானை குட்டிகள் ஒன்றோடு ஒன்று உரசிய படி, அங்கும் இங்கும் நகர்ந்த படி இருக்கிறது. அந்த சமயத்தில், பின்னால் நின்ற குட்டி யானை ஒன்று தனது தும்பிக்கையை கொண்டு பத்திரிகையாளர் தலையில் உரசியது. ஆரம்பத்தில் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தொடர்ந்து பத்திரிகையாளர் பேசிக் கொண்டே தான் இருந்தார்.
ஆனால், பத்திரிகையாளரின் தலையில் மட்டும் தும்பிக்கை கொண்டு உரசியபடி இருந்த குட்டி யானை, அடுத்த சில வினாடிகளில் நேராக அந்த நபரின் முகத்திலும் தும்பிக்கையை போட்டு மூக்கு உள்ளிட்ட பகுதிகளிலும் தேய்க்க சிரிப்பை அடக்க முடியாமல் பத்திரிகையாளரும் உடைந்து சிரிக்க ஆரம்பித்து விட்டார்.
மிகவும் க்யூட்டாக திரும்ப திரும்ப கூட பார்த்து ரசிக்கும்படியான அளவில் இருக்கும் இந்த வீடியோ, பலரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.
Baby elephant disrupting a TV reporter is the best part of today. pic.twitter.com/DseqitxoG9
— Desert Frogger (@BT0731) November 14, 2022

மற்ற செய்திகள்
