சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்திய பாஜக தலைவர்கள்.. பெரம்பலூரில் நெல்லைக்கண்ணன் கைது!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Jan 01, 2020 05:28 PM

பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இருவரையும் பற்றி தகாத முறையில் பேசியதாக நெல்லைகண்ணனை கைது செய்ய வலியுறுத்தி சென்னையில் பாஜகவினர், மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

BJP Politicians rally in Chennai against Nellai Kannan Speeach

பாஜகவின் முக்கிய தலைவர்கள்  மத்திய முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், பாஜகவின் மூத்த தலைவர் தேசிய செயற்குழு உறுப்பினர் மற்றும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன் , பாஜகவின் தேசிய செயலாளர் H.ராஜா, பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகிய நால்வரும் மெரினா கடற்கரை காந்தி சிலை அருகில் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கென பாஜக தலைமை அலுவலகம் கமலாலயத்தில் 3.30 மணியளவில் புறப்பட்டு 4 மணி அளவில் காந்தி சிலையை அடைந்தனர். இந்நிலையில் நெல்லை கண்ணனை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா உள்ளிட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.

எனினும் பிரதமர் மோடி, அமித்ஷா  குறித்து அவதூறாக பேசியதாக பா.ஜ.க. அளித்த புகாரின் அடிப்படையில் நெல்லை கண்ணன் மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. முன்னதாக உடல்நலக் குறைவு காரணமாக நேற்று மருத்துவமனையில் நெல்லை கண்ணன் அனுமதிக்கப்பட்டிருந்த நெல்லைக்கண்ணன் நேற்றைய தினம் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் விடுதியில் இருந்தபோது கைது செய்யப்பட்டார்.

Tags : #BJP #HRAJA #NELLAIKANNAN