டெல்லியில் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்...? அதிரடி கருத்துக் கணிப்பு...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Feb 09, 2020 11:12 PM

நேற்று நடைபெற்ற டெல்லி  சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

Voter poll released the announcement of election result

டெல்லி மாநில சட்டசபைத் தேர்தல் நேற்று நடைபெற்றது, வரும் 11ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனே ஏபிபி நியூஸ்-சி வோட்டர் கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது.

இந்தக் கருத்துக் கணிப்பின்படி, 70 இடங்களை கொண்ட டெல்லி சட்டசபையில் ஆம் ஆத்மி கட்சி 59 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடிக்கும் என கூறப்பட்டுள்ளது. பாஜக 8 இடங்களையும், காங்கிரஸ் 3 இடங்களையும் கைப்பற்ற வாய்ப்புள்ளதாக அந்தக் கணப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015 சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி 67 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. பாஜக 3 இடங்களில் வென்றிருந்தது. தற்போதைய நிலவரப்படி, டெல்லி சட்டசபையில் ஆம் ஆத்மி 62, பாஜக 4 இடங்களுடன் உள்ளன.

Tags : #ELECTIONS #DELHIELECTION