VIDEO: 'வீடியோ' எடுக்குறத கவனிக்கல... அது தெரியாம மேடம் 'எக்ஸ்ப்ரஷன்'ல பின்றாங்க...! - இணையத்தை 'தெறிக்க' விட்ட வைரல் வீடியோ...!
முகப்பு > செய்திகள் > இந்தியாவாத்தி கமிங் பாட்டிற்கு சிறுமி ஒருவர் இருக்கையில் உட்கார்த்த மாதிரியே நடனமாடிய வீடியோ ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
![viral Video of Kerala girl dancing vaathi coming on a seat viral Video of Kerala girl dancing vaathi coming on a seat](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/viral-video-of-kerala-girl-dancing-vaathi-coming-on-a-seat.jpg)
கேரளாவை சேர்ந்த பிரவீனா என்ற பெண் தன்னுடைய உறவினர் ஒருவரின் திருமணத்திற்கு சென்றுள்ளார். திருமணத்தின் போது மண்டபமே அதிரும் வகையில் 'தளபதி' விஜயின் 'வாத்தி கமிங்' பாடல் போடப்பட்டுள்ளது.
பொதுவாகவே தமிழில் விஜய்க்கு எந்த அளவு ரசிகர்கள் உள்ளனரோ அதேப்போல் மலையாளத்திலும் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம். அதுவும் விஜய் படத்திற்கு மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு இணையான வரவேற்பு காணப்படும்.
விஜய்யின் பாடலுக்கு மண்டபமே ஆடும் போது பிரவீனா என்ற பெண் தன் இருக்கையிலேயே கைகளையும் அசைத்தும், அட்டகாசமான எக்ஸ்பிரஷன்களை அள்ளி தெளித்துள்ளார்.
அப்போது அவருக்கு தெரியாமல் அவரின் கலக்கல் டான்ஸ் கேமராவில் படம் பிடிக்கப்பட்டு இப்போது அந்த வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)