'அய்யோ யாராச்சும் வந்து காப்பாத்துங்களேன்...!' ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரிடம் குரங்கு செய்த சேட்டை...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Issac | Jan 29, 2020 06:05 PM

தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் இளையோர் உலக கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்துள்ள தொடக்க வீரர் குரங்கு கீறியதால் சொந்த நாடு திரும்பியுள்ளார்.

U19 World Cup: Batsman returning after scratchi monkey\'s face

தென்ஆப்பிரிக்காவில் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான ஆட்டம் கிம்பெர்லியில் நடைபெற்றது.

இந்த போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. அதன்பின் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் விலங்குகள் சரணாலயம் சென்று பொழுதை கழித்தனர். அப்போது எதிர்பாராத விதமாக குரங்கு ஒன்று ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரராக களம் இறங்கி விளையாடி வந்த ஃபிராசர்-மெக்கர்க்கின் முகத்தில் கீறியது.

இருந்தாலும் அவர் போட்டிகளில் விளையாடி வந்தார். நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக விளையாடினார். இந்த போட்டியில் ரன்ஏதும் எடுக்காமல் ரன்அவுட் ஆனார்.

இந்நிலையில் முன்னெச்சரிக்கை காரணமாக ஆஸ்திரேலியா புறப்பட்டு வருமாறு கிரிக்கெட் வாரியம் கேட்டுக்கொண்டதால் உடனடியாக ஆஸ்திரேலியா புறப்படுகிறார்.

Tags : #CRICKET #MONKEY