'சென்னையில் அடுத்த 2 நாளைக்கு டேக் டைவர்ஷன்தான்!'.. 'இந்த ரூட்லலாம் போனா திருப்பிவிட்ருவாங்க'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Oct 10, 2019 03:48 PM

மாமல்லபுரத்தில் சந்திக்கவுள்ள, இந்திய பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோரின் சந்திப்புக்கான வருகையை அடுத்து, சென்னையில் போக்குவரத்து சாலைகளில் சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

chennai traffic important changes for Modi xijinping Meet

அக்டோபர் 11-ஆம் தேதி மதியம் 12.30 முதல் 2 மணிவரை பெருங்களத்தூரில் இருந்து நகருக்குள் வரும் வாகனங்களோ ஓ பாய்ண்ட் சந்திப்பில் இருந்து மதுரவாயல் புறவழிச் சாலைக்கும், சென்னை தென்பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் பல்லாவரம் ரேடியல் சாலை வழியாக மதுரவாயல் புறவழிச் சாலைக்கும் திருப்பிவிடப்படும்.

அக்டோபர் 11-ஆம் தேதி 3.30 முதல் 4.30 வரை ஜிஎஸ்டி சாலையில் வரும் அனைத்து வாகனங்களும் 100 அடி சாலை வழியே மாற்றிவிடப்படும். அக்டோபர் 11-ஆம் தேதி மதியம் 2 மணிமுதல் இரவு 9 மணிவரையிலும், பின்னர் அக்டோபர் 12-ஆம் தேதி காலை 7.30 முதல் மதியம் 2 மணிவரையிலும் ராஜீவ் காந்தி சாலையில் நகருக்குள் வரும் வாகனங்கள் சோழிங்கநல்லூர் சந்திப்பில் பெரும்பாக்கம் வழியாக மாற்றச்சொல்லி அறிவுறுத்தப்படும்.

கனரக, இலகுரக, சரக்கு மற்றும் டேங்கர் லாரிகளை பொருத்தவரை, அக்டோபர் 11 மற்றும் 12-ஆம் தேதிகளில் காலை 6 மணி முதல் இரவு 11 மணிவரை, விமான நிலையத்தில் இருந்து கத்திப்பாரா வரை அண்ணாசாலை சர்தார் வல்லபாய் படேல் சாலை, கிழக்கு கடற்கரை சாலை வரை தடை செல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

அக்டோபர் 11-ஆம் தேதி மதியம் 2 மணி முதல் இரவு 9 மணிவரையிலும் மற்றும் அக்டோபர் 12-ஆம் தேதி காலை 7 மணி முதல் மதியம் 1.30 மணிவரையிலும் , கிழக்கு கடற்கரை சாலையில் வரும் அனைத்து வாகனங்களும் அக்கரை சந்திப்பில் முட்டுக்காடு செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது.

Tags : #MODIXIJINPINGMEET