பேஸ்புக் காதலனுடன் லிவிங் டுகெதரில் இருந்த மனைவி.. கோபத்துல கணவர் செஞ்ச காரியம்.. பதறிப்போன மக்கள்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்திர பிரதேச மாநிலத்தில் வேறு ஒரு ஆணுடன் லிவிங் டுகெதரில் இருந்துவந்த மனைவியை கொலை செய்திருக்கிறார் கணவர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.

Also Read | அய்யய்யோ.. வெளிச்சத்துல தூங்குனா இந்த பிரச்சினை எல்லாம் வரலாமா? அதிர வைத்த ஆராய்ச்சியாளர்கள்..!
உத்தரப்பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத் பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ் கவுதம். இவருக்கும் தாஜ்கஞ்ச் பகுதியை சேர்ந்த ரித்திகா சிங் என்பவருக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருணம் நடைபெற்றிருக்கிறது. சமூக வலை தளங்களில் துடிப்புடன் செயல்பட்டுவந்த சிங், பயணம், சமையல் உள்ளிட்ட பதிவுகளை எழுதி வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு சிங்கிற்கு பேஸ்புக் மூலமாக விபுல் அகர்வால் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.
லிவிங் டுகெதர்
இதனை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு தனது கணவனை பிரிந்த சிங், விபுலுடன் வசித்து வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக நாக்லா மேவதி பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பிற்கு குடிபெயர்ந்துள்ளார்கள் சிங் - விபுல் இணை. இந்த விஷயம், சிங்கின் கணவர் ஆகாஷுக்கு தெரிய வந்திருக்கிறது. இதனால் கோபமடைந்த அவர், நேற்று காலை 11 மணி அளவில் அந்த அப்பார்ட்மெண்டிற்கு சென்றிருக்கிறார்.
நான்காவது தளத்தில் அமைந்திருந்த ரித்திகாவின் குடியிருப்புக்குள் இரண்டு ஆண்கள், இரண்டு பெண்களுடன் ஆகாஷ் நுழைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். கொஞ்ச நேரத்தில் வாக்குவாதம் சண்டையாக மாறவே, சிங் மற்றும் விபுலை இந்த கும்பல் தாக்கத் துவங்கியிருக்கிறது. விபுலை அங்கிருந்த குளியலறைக்குள் வைத்து பூட்டிய கும்பல், சிங்கை மாடியில் இருந்து கீழே தள்ளியிருக்கிறது. இதனால் சம்பவ இடத்திலேயே சிங் உயிரிழந்திருக்கிறார்.
விசாரணை
இதனிடையே விபுல் தன்னை காப்பாற்றும்படி கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் ஓடிவந்திருக்கின்றனர். அப்போது ஆகாஷுடன் வந்த இரு ஆண்கள் தப்பிச்சென்றுவிட்டனர். இதனிடையே, காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்படவே, விரைந்துவந்த போலீசார் ஆகாஷ் மற்றும் இரண்டு பெண்களை கைது செய்தனர். மேலும், மரணமடைந்த ரித்திகாவின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், சிசிடிவி காட்சிகள் மூலம் தப்பியோடிய இரு ஆண்களை தேடிவருகின்றனர். உத்திர பிரதேசத்தில் வேறு ஒரு ஆணுடன் லிவிங் டுகெதரில் வசித்துவந்த மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மற்ற செய்திகள்
