"அது பாம்பு இல்ல".. வீட்டில் பாம்புடன் வசித்து வரும் பெண் சொன்ன 'அதிர வைக்கும்' பதில்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகணவர் மறுபிறவி எடுத்து வந்துள்ளதாக கூறி பாம்புடன் பெண் ஒருவர் வசித்து வரும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் பாகலகோடா மாவட்டம் வாடிப்பட்டி தாலுக்காவில் உள்ள குளஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி மௌனிஷ் கம்பாரா. இவரது கணவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.
இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு மூதாட்டி வீட்டுக்குள் ஒரு நாகப்பாம்பு புகுந்துள்ளது. பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் நாகப்பாம்பு வீட்டுக்கு வந்ததும் இறந்து போன தனது கணவன் தன்னை பார்க்க வந்திருப்பதாக கருதி அதற்கு பால் ஊற்றி வளர்த்து வந்துள்ளார்.
இதனை அடுத்து நான்கு நாட்களாக அந்த பாம்புடன் தங்கியுள்ளார். தகவலறிந்த அப்பகுதி மக்கள் பாம்பை பிடிக்க முயன்றனர். ஆனால் மூதாட்டி, தனது கணவர் தான் பாம்பு உருவில் வந்துள்ளார் எனக் கூறி பாம்பை பிடிக்க விடாமல் தடுத்து விட்டார்.
மேலும் பாம்பை பிடிக்க முயன்றபோது மூதாட்டி கண்ணீர் விட்டு அழுதார். இதனால் அப்பகுதி மக்கள் பாம்பை பிடிக்கும் முயற்சியை கைவிட்டனர். இறந்த கணவர் வந்துள்ளதாக பாம்புடன் மூதாட்டி தங்கியுள்ள சம்பவம் அப்பகுதியில் பேசுபொருளாகியுள்ளது.

மற்ற செய்திகள்
