அய்யய்யோ.. வெளிச்சத்துல தூங்குனா இந்த பிரச்சினை எல்லாம் வரலாமா? அதிர வைத்த ஆராய்ச்சியாளர்கள்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Madhavan P | Jun 25, 2022 06:46 PM

வயதானவர்கள் வெளிச்சம் மிகுந்த இடங்களில் உறங்குவதால் பல்வேறு உடல் சார்ந்த பாதிப்புகள் வரலாம் என கண்டுபிடித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.

Sleeping with lights on Can make you diabetic obese says Researchers

Also Read | புருஷன் வர 15 நாள் ஆகும்.. காதலனுடன் லாட்ஜுக்கு சென்ற மனைவி.. விஷயம் கேள்விப்பட்டு நேரா ரூமுக்குள்ள நுழைஞ்ச கணவன் செஞ்ச காரியம்..!

ஆரோக்கியமான உடலுக்கு நல்ல உறக்கம் தேவை என்கிறார்கள் மருத்துவர்கள். தூக்கம் குறைந்தால் அதுவே பல உடல் மற்றும் உளவியல் சிக்கலை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில், வெளிச்சமான இடங்களில் தூங்குபவர்களுக்கு உடற்பருமன், நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தற்போது கண்டுபிடித்திருக்கிறார்கள்.

ஆராய்ச்சி

Northwestern Medicine பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் 63 முதல் 84 வயதுடைய முதியவர்கள் மற்றும் பெண்கள், இரவில் தூங்கும் போது எந்த அளவு வெளிச்சம் இருந்தாலும், அவர்கள் உடல் பருமனாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த ஆராய்ச்சியில் கலந்துகொண்ட தன்னார்வலர்களின் மணிக்கட்டில் கருவி ஒன்று பொருத்தப்பட்டிருக்கிறது. வெளிச்சத்தின் அளவு இதன்மூலம் கணக்கிடப்பட்டிருக்கிறது.

Sleeping with lights on Can make you diabetic obese says Researchers

இதன்மூலம், வயதான மக்கள் வெளிச்சத்தில் உறங்கும்போது அவர்களுக்கு ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். இந்த ஆய்வறிக்கை மருத்துவ இதழான  SLEEP-ல் ஆராய்ச்சியாளர்களால் பிராசுரிக்கப்பட்டிருக்கிறது.

வெளிச்சம்

வடமேற்கு பல்கலைக்கழகத்தில் நரம்பியல் உதவிப் பேராசிரியர் டாக்டர் மின்ஜீ கிம் இதுகுறித்து பேசுகையில்,"ஒருவரின் ஸ்மார்ட்போனில் இருந்து, இரவில் டிவியை அப்படியே விட்டுவிடுவது அல்லது ஒளி மாசுபாடு ஆகிய காரணங்களினால் நாம் வெளிச்சத்துடன் உறங்கும் நிலை ஏறடுகிறது. ஒரு நாளின் 24 மணி நேரமும் ஏராளமான செயற்கை ஒளி மூலங்களுக்கு மத்தியில் நாம் வாழ்கிறோம். இது வயதானவர்களின் உடல்நிலையில் எவ்வித பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதை சோதிக்க நினைத்தோம்" என்றார்.

இந்த ஆய்வில் 552 தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர். இவர்கள் பகல் மற்றும் இரவில் வெளிச்சம் இல்லாமேல் எவ்வளவு நேரம் இருக்கிறார்கள் என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதன்மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகளைக்கொண்டு ஆய்வில் ஈடுபட்ட நிபுணர்கள் வெளிச்சத்தில் அதிக நேரம் இருந்தவர்களுக்கு உடற்பருமன், நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஆகியவை ஏற்பட வாய்ப்பிருப்பதை கண்டறிந்திருக்கின்றனர்.

Sleeping with lights on Can make you diabetic obese says Researchers

இதன்மூலம், வயதானவர்கள் இரவில் குறைவான வெளிச்சம் இருக்கும் இடங்களில் உறங்கவேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.

Also Read | கை தவறி ஆற்றில் விழுந்த போன்.. 10 மாசத்துக்கு அப்பறம் கிடைச்சும் Work ஆன அதிசயம்..!

Tags : #SLEEPING WITH LIGHTS #DIABETIC OBESE #RESEARCHERS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Sleeping with lights on Can make you diabetic obese says Researchers | India News.