40 வருஷமா செப்டிங் டேங்கில் மனைவியின் உடலை வைத்த 89 வயது கணவர்..? பரபரப்பு சம்பவம்.!
முகப்பு > செய்திகள் > உலகம்பிரிட்டனில் பன்றி வளர்ப்பாளர் ஒருவர் மனைவியை கொலை செய்து 40 ஆண்டுகளாக நாடகம் ஆடியதாக சொல்லப்படும் சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இங்கிலாந்தின் வெஸ்ட் மிட்லண்ட்ஸில் உள்ள வொர்செஸ்டர்ஷையர் கவுன்டியில் நடந்ததுதான் இந்த சம்பவம். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், இதை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இது தொடர்பாக நடந்துவந்த விசாரணையின்படி, 89 வயதான டேவிட் வெனாபிள்ஸ் (David Venables) சுமார் 40 ஆண்டுகளாக தன்னுடைய மனைவியை கொலை செய்ததை மறைத்திருக்கிறார்.
இவரது மனைவியின் பெயர் பிரெண்டா வெனபிள்ஸை (Brenda Venables). இவர்களது வீட்டுக்குள் இருந்து வெகு தொலைவில் இருக்கும் கழிவுநீர் தொட்டியில்தான், டேவிட் வெனாபிள்ஸ் தனது மனைவியை கொலை செய்து, அதில் அவரது உடலை மறைத்து வைத்திருந்திருக்கிறார் என்றும், 1982 ஆம் ஆண்டு இந்த கொலை நடந்து இருக்கிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன் பிறகு மனைவி காணாமல் சென்று விட்டார் என்று சொல்லி போலீஸில் புகார் அளித்திருக்கிறார் டேவிட் வெனாபிள்ஸ். சுமார் 35 ஆண்டுகளுக்கு பிறகு டேவிட் வெனாபிள்ஸின் உடற் பாகங்கள் தொடர்பான எச்சங்கள் கழிவுநீர் தொட்டியில் கண்டுபிடிக்கப் பட்டிருக்கின்றன. இதை பார்த்து பதைபதைப்பு அடைந்த அந்த மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க இதுதொடர்பாக வழக்கு விசாரணை நடந்து இருக்கிறது.
அதன்படி, தற்போது 89 வயதாகும் டேவிட் வெனாபிள்ஸ், தான் கொண்ட தகாத உறவுக்கு இடைஞ்சலாக இருந்ததால், தமது 49வது வயதில், அப்போது 48 வயதான தன்னுடைய மனைவியை கொன்று கழிவுநீர் தொட்டியில் வீசியதாகவும், பின்னர் 1982 ஆம் ஆண்டு மனைவியை காணவில்லை என்று புகார் அளித்திருக்கிறார் என்றும் நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது.
கடந்த 2019 ஆம் வருடம் தம்முடைய மருமகனுக்கு தம்முடைய பண்ணையை டேவிட் வெனாபிள்ஸ் அளித்திருக்கிறார். அந்த வருடம்தான் செப்டிக் டேங்கை தொழிலாளர்களை அகற்றிருக்கிறார்கள். அப்போதுதான் டேவிட் வெனாபிள்ஸின் மனைவியின் உடற்கூறுகள் அழுகிய நிலையில், கிடைக்க, அவை சோதனைக்கு அனுப்பப்பட்ட பின், அனைத்தும் டேவிட் வெனாபிள்ஸின் மனைவியுடையது என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. எனினும் டேவிட் வெனாபிள்ஸ் தம்முடைய மனைவியை கொன்றதாக இன்னும் ஒப்புக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.