"பியூட்டி 'பார்லர்' வேலன்னு தான் கூட்டிட்டு போனாங்க’ .. அங்க, ஏதோ ஒரு 'மாத்திரை' குடுத்து... ‘மெதுவா, என்னை’...” - ‘15 வயது சிறுமிக்கு நேர்ந்த 'குலை நடுங்கும்' கொடூரம்!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்தரப்பிரதேச மாநிலம், மிர்சாபூர் மாவட்டத்தை அடுத்த சுனார் என்னும் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை அங்குள்ள பெண் ஒருவர் வாரணாசியின் ராம்நகர் பகுதியிலுள்ள பியூட்டி பார்லர் ஒன்றில் வேலை வாங்கி தருவதாக கூறி கடந்த ஜூன் மாதம் அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு சென்ற நாளிலேயே சிறுமி அங்கு வேலை செய்ய ஆரம்பித்த நிலையில், அந்த பார்லரின் உரிமையாளர், சிறுமிக்கு போதை பொருட்கள் மற்றும் மாத்திரைகளை கொடுத்து சிறுமியிடம் தவறாக நடந்துள்ளார். தொடர்ந்து, அந்த சிறுமியை வீடு ஒன்றில் அடைத்து வைத்து அந்த பார்லரில் உரிமையாளர் தவறான தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். தொடர்ந்து, அந்த சிறுமியை பல ஆண்கள் மற்றும் பெண்கள் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
அந்த இடத்தில் வைத்து பல்வேறு வேதனைகளை அனுபவித்து வந்த சிறுமி, கடந்த 16 ஆம் தேதி அங்கிருந்து தப்பித்துள்ளார். பின்னர், போலீசாரிடம் தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து சிறுமி புகாரளித்ததை தொடர்ந்து, ராம்நகர் போலீசார் சுனார் பகுதி போலீசாருக்கு தொடர்பு கொண்டு சிறுமி குறித்து தகவல் தெரிவித்துள்ளனர்.
அதன் பின், சிறுமியை சுனார் போலீசாரிடம் ஒப்படைத்த நிலையில், சிறுமி நேர்ந்த கொடூரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து சம்மந்தப்பட்ட நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கடந்த சில வாரங்களாக, உத்தரப்பிரதேச மாநிலத்தில் சிறுமிகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகள் மற்றும் கொலைகள் நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
