"ஸ்காலர்ஷிப் வாங்கப் போறேன்னு கிளம்பி போன 'பொண்ணு'",,.. கடைசில 'இப்டி' சிதைந்து கிடக்கணுமா??,,.. குளத்தில் கிடந்த 'உடல்',,.. அதிர்ந்து போன 'கிராமம்'!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்தரப்பிரதேச மாநிலம், லக்கிம்புர் கேரி மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமம் ஒன்றில், 17 வயது சிறுமியின் சிதைந்த உடல் ஒன்று குளம் ஒன்றின் அருகே கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் அங்கு வந்து விசாரணையை மேற்கொண்டனர். அதில் சிறுமியின் உடலின் பல இடங்களில், கூர்மையான ஆயுதங்களை கொண்டு தாக்கிய காயங்கள் இருந்தது. சிறுமியின் கிராமத்தில் இருந்து சரியாக 200 மீ தொலைவில் அமைந்துள்ள வற்றிய குளம் ஒன்றில் சிறுமியின் உடல் கிடந்துள்ளது. இதனைக் கண்ட சிறுமியின் குடும்பத்தினர் கதறித் துடித்தனர்.
மேலும், பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதும் உறுதியானது. சிறுமியின் உறவினர்கள் இந்த சம்பவம் குறித்து கூறுகையில், கடந்த திங்கட்கிழமையன்று தனது வீட்டில் இருந்து கிளம்பி அருகிலுள்ள கிராமம் ஒன்றிற்கு ஸ்காலர்ஷிப் விண்ணப்பிக்க வேண்டிச் சென்றுள்ளார்.
அதன் பிறகு, அவர் தனது வீட்டிற்கு திரும்பி வரவில்லை. உடனடியாக உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், யார் மீது சந்தேகப்படுவது என்பதும் குடும்பத்தினருக்கு தெரியவில்லை என அவர்கள் கூறுகின்றனர். கடந்த 10 நாட்களில், அந்த மாவட்டத்தில், சிறுமியை ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இறந்து போவது இது இரண்டாவது முறையாகும். கடந்த 15 ஆம் தேதியன்று 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கரும்பு நிலத்தில் உடல் கண்டெடுக்கப்பட்டது அந்த மாவட்ட மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மற்ற செய்திகள்
