'அனாதை' இல்லத்துல வெச்சு... "பல மாசமா பொண்ணோட வாழ்க்கைய சீரழிச்சுருக்காங்க"... இறுதியில் சிறுமிக்கு நேர்ந்த 'துயரம்'!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாதெலங்கானா மாநிலம் சங்கா ரெட்டி மாவட்டத்தை அடுத்த அமீன்பூர் பகுதியில் ஆதரவற்றோர் விடுதி ஒன்று உள்ளது.

இங்குள்ள சிறுமி ஒருவர் பல மாதங்களாக தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வந்த சம்பவம் சில தினங்களுக்கு முன் வெளியாகி நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விடுதியை விஜயா என்பவர் பராமரித்து வரும் நிலையில், வேணுகோபால் என்பவர் அங்கு அடிக்கடி வந்துள்ளார். அப்போது அந்த சிறுமியை அவர் தொடர்ந்து பல மாதங்களாக, சீரழித்து வந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ஊரடங்கு சமயத்தில் உறவினர் வீட்டிற்கு வந்த சிறுமியின் உடல்நிலை மோசமாக இருந்ததன் பெயரில் உறவினர்கள் பதறிப் போயினர். தொடர்ந்து, மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது தான் சிறுமிக்கு நேர்ந்த துயரம் குறித்த தகவல் வெளிச்சத்திற்கு வந்தது. இந்நிலையில், இது தெடர்பாக விஜயா, வேணுகோபால் உட்பட மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர்.
உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி, தற்போது சிகிச்சை பலனளிக்காத நிலையில், பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பாலியல் வன்கொடுமை வழக்காக விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சிறுமி மரணமடைந்துள்ளதால் இதனை கொலை மற்றும் கற்பழிப்பு வழக்காக விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

மற்ற செய்திகள்
