42 வயது டீச்சருக்கு உள்ளாடையை பரிசாக கொடுத்த வீட்டு ஓனர்... போட்டு வந்து காட்ட சொல்லி டார்ச்சர்... பதிலுக்கு பெண் செய்த காரியம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாபெங்களூர் : 42 வயதாகும் ஆசிரியை ஒருவர், தான் வசித்து வரும் வீட்டின் உரிமையாளர் மீது அளித்துள்ள புகார், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம், பெங்களூரை அடுத்த ஸ்ரீநகர் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் பத்மநாபன். இவருக்கு சொந்தமான வீட்டில், 42 வயதாகும் பள்ளி ஆசிரியை ஒருவர், வாடகைக்கு தங்கியுள்ளார்.
கடந்த 12 ஆண்டுகளாக, அந்த ஆசிரியை அங்கு தங்கி வரும் நிலையில், கடந்த ஆண்டு அவரது பிறந்தநாள் வந்துள்ளது. அப்போது, கிப்ட் பாக்ஸ் ஒன்றை பத்மநாபா, ஆசிரியைக்கு அளித்துள்ளார்.
டார்ச்சர்
ஏதாவது சாதாரண பரிசாக இருக்கும் என கருதி, அதனைத் திறந்து பார்த்த பள்ளி ஆசிரியைக்கு, பேரதிர்ச்சி காத்திருந்தது. அந்த பாக்ஸுக்குள், பெண்ணின் உள்ளாடை இருந்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த பரிசை அளித்தது முதல், தன்னுடன் வெளியே வர வேண்டும் என்றும், தான் அளித்த பரிசை அணிந்து கொண்டு, தன் முன்பே வந்து நிற்க வேண்டும் என்றும், பத்மநாபன் அந்த ஆசிரியைக்கு பாலியல் ரீதியாக, டார்ச்சர் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வீட்டை காலி செய்
இப்படி பட்ட தொல்லைகள் மட்டும் இல்லாமல், தொலைபேசியில் அழைத்து, ஆபாசமாகவும் பேசி தொந்தரவு செய்துள்ளதாகவும் அந்த பெண்மணி குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து, பத்மநாபனின் செயலுக்கு, ஆசிரியை எதிர்ப்பை மட்டும் வெளிப்படுத்திக் கொண்டே இருந்ததால், உடனடியாக வீட்டைக் காலி செய்யுமாறும் பத்மநாபன் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
போலீசில் புகார்
இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன், கேட் வழி ஏறி குதித்து, தான் தங்கியிருக்கும் வீட்டின் கதவினை, வெளிப்புறமாக பத்மநாபன் செய்துள்ளார். இதனால், ஹவுஸ் ஓனரின் தொல்லை தாங்க முடியாத ஆசிரியை, போலீஸ் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
தவறான குற்றச்சாட்டு
தொடர்ந்து, பத்மநாபன் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரிடம் இது பற்றி விசாரணையை மேற்கொண்டனர். அப்போது அந்த பெண் தன்னைக் குறித்து தவறான புகாரை அளித்துள்ளதாகவும், வீட்டைக் காலி செய்யக் கூறியதால், அவர் இப்படி நாடகமாடி, பொய் புகார் அளித்துள்ளார் என்றும், தன் மீதான குற்றச்சாட்டை பத்மநாபன் மறுத்துள்ளார்.
முதற்கட்ட விசாரணை
இது பற்றி முதற்கட்ட விசாரணையில், வீட்டைக் காலி செய்வது பற்றி இருவருக்கள்ளும் தகராறு இருப்பது, உறுதியானதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆசிரியை தங்கியிருந்த வீட்டை, பத்மநாபன் பூட்டிச் சென்றதும், உறுதியானது.
ஓடி வாங்க.. கதவ உள்பக்கமா சாத்திட்டாரு.. உடைச்சு உள்ள போனப்போ போலீசார் கண்ட காட்சி.. என்ன நடந்தது?
நடவடிக்கை
'பாலியல் துன்புறுத்தல் மற்றும் பரிசு அளிக்கப்பட்டது குறித்து, தொடர்ந்து தீவிரமாக விசாரித்து வருகிறோம். குற்றச்சாட்டுகள் உறுதியாகும் பட்சத்தில், குற்றவாளி மீது நடவடிக்கை எடுப்போம்' என போலீசார் தெரிவித்துள்ளனர்.