'மரண பயத்தில்'... 'ரகசியமா கிம் ஜாங் உன் செஞ்ச காரியம்???'... 'அதுவும் சீனா உதவியோட?!!'... 'பகீர் குற்றச்சாட்டால் கிளம்பியுள்ள புது சர்ச்சை!!!'...
முகப்பு > செய்திகள் > உலகம்கிம் ஜாங் உன் மற்றும் குடும்பத்தினருக்கு சீனா ரகசியமாக தடுப்பூசி சப்ளை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வட கொரிய அதிபரான கிம் ஜாங் உன் கொரோனா தடுப்பூசியை ரகசியமாகப் பெற்றுக் கொண்டதாக ஜப்பான் உளவுத்துறை ஆதாரங்களை மேற்கோள் காட்டி அறிக்கை ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சர்வாதிகாரி கிம் ஜாங் உன் மற்றும் வட கொரியாவின் பல உயர் அதிகாரிகள் மற்றும் கிம்மின் குடும்பத்தினருக்கு கொரோனா தடுப்பூசி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அத்துடன் சீனா ரகசியமாக அந்த கொரோனா தடுப்பூசியை வட கொரியாவுக்கு வழங்கியுள்ளது எனவும் உளவுத்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக கடந்த இரண்டு, மூன்று வாரங்களுக்குள் கிம் ஜாங் மற்றும் பிறருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் அந்த குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி தரவுகளை ஹேக் செய்ததன் பின்னணியில் வட கொரியா இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
வட கொரிய நாட்டில் அதிகாரப்பூர்வமாக கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அறிவிக்கப்படாதபோதும், அங்கு பெருமளவிலான மக்கள் ஏற்கனவே கொரோனாவால் வறுமையை எதிர்கொண்டுள்ளனர். அதோடு வட கொரியா பல பொருளாதார தடைகளையும் எதிர்கொண்டுள்ளதால், கொரோனாவுக்குப் பிறகு நாட்டின் பொருளாதார நிலைமை மிகவும் மோசமாகியுள்ளது. இந்நிலையிலேயே தற்போது இந்த பகீர் குற்றச்சாட்டு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.